பாடல் எண் :3836

கோடிக் குழகர் கோயிலயற் குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் “கடிதாய்க் கடற்காற்Óறென் றெடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த பரிசும் பதிகத் திடைவைத்தார்.
89
(இ-ள்) கோடிக் குழகர்...உள்புக்கு - கோடிகுழகரது திருக்கோயிலின் அயலிலும் புறத்தில் எங்கும் நாடியும் ஒரு குடியும் காணாது திருக்கோயிலினுள்ளே புகுந்து; நம்பர் பாதம் தொழுது - இறைவரது திருவடியைத் தொழுது; உள்ளம் வாடி - மனம் மிக வருந்தி; கடிதாய்....பாடி - மலர் போன்ற கண்களில் நீர் வழியக் “கடிதாய்க் கடற்காற்றுÓ என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி அருளி. காடுகாள்...வைத்தார் - காடுகாளுடன் இறைவர் வீற்றிருக்கும் தன்மையினையும் அப்பதிகத்தினுள் வைத்துப் போற்றியருளினர்.
(வி-ரை) குடிகள் ஒன்றும் அயற் புறத்து எங்கும் நாடியும் என்க.
குடிகள் ஒன்றும் - குடி என்பது குடிமக்களினிருப்பு என்ற பொருள் வழக்குப்பற்றி வந்ததாதலின் ஒருவரும் என்னாது ஒன்றும் என்றார். “குடிதானயலேÓ (தேவா).
அயல் - கோயிலின் பக்கம் வாழும் அகம்படித் தொண்டர்களின் குடியினையும், புறத்து - கோயிலினின்றும் தூரத்தில்வாழும் புறத்தொண்டர் குடிகளையும்பற்றி உணர்த்தியன. “அயலேÓ (நம்பிகள் தேவாரம்.)
உள்ளம் வாடி - தொண்டு புரிவாரும் வழிபடுவாரும் உடன் இன்றி இறைவர் தனியே கடற்காற்றுக் கடிதாய் மணலை வாரியிரைக்கத் தாம் வீற்றிருத்தலைக் காணச் சகியாது மனம் வாடினர் என்க. இஃது அன்பின் மிகுதியால் ஆயது; “கைம்மலை கரடி வேங்கை யரிதிரி கானந் தன்னில், இம்மலை தனியே நீரிங்கிருப்பதே யென்று நைந்தார்Ó (756) என்ற கண்ணப்ப தேவரது நிலை ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
மலர்க்கண் நீர் வார - இறைவர் தனியிருத்தல் காணச் சகியா தெழுந்த மிக்க மன வருத்தத்தால் கண்ணீர் பெருகியது மெய்ப்பாடு; “கொடியேன் கண்கள் கண்டனÓ என்ற பதிகக் கருத்து; “பாவியேன் கண்ட வண்ணம்Ó (818).
காடுகாள் புணர்ந்த - காடுகாள் - துர்க்கை. காடுகாள் - காடுகிழாள் என்பதன் மரூஉ; இது வனதுர்க்கை எனப்படும். நவதுர்க்கையின் பேதத்துள் ஒன்று; “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ; இழையணி சிறப்பிற் பழையோள் குழவிÓ (முருகு 258 - 259); வெற்றியையுடைய...வனதுர்க்கையினுடைய புதல்வ!; காடுகிழாள் என்பது இக்காலத்துக் காடுகாள் என மருவிற்று, அவளும் இறைவனுடைய சத்தியாகலின்" (மேற்படி நச் - உரை) என்பதனாலும் அறிக. கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலைத்திணைக்குரிய பண்பிற் கூறியபடி; “நீலி கோட்டங்களும் நிரந்து...பாலையுஞ் சொல்ல லாவனÓ (1092) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; துர்க்கை - நீலி எனவும் படுவாள்; நீலி கோட்டம் பாலைக்குக் கூறுதல் காண்க; இங்குக் கடற்கரை நெய்தற் றிணையே யாயினும், அதனியல்பு திரிந்து கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் குடிகளொன்றும் வாழ இடமின்றித்துயருறுத்தும் நிலைபற்றி இங்குப் பாலைத்திணைபற்றிக் கூறியதாயிற்று. கடும்பகற் போது பற்றியதுமாம்.
காடுகாள்...பதிகத்திடை - வைத்தார் - “கையார் வளைக் காடுகா ளோடு முடனாய்Ó (5) என்பது பதிகம். இங்குத் துர்க்கை சந்நிதியுண்டு.