பாடல் எண் :3841

படியேறு புகழ்ச்சேரர் பெருமானும் பார்மிசைவீழ்ந்
“தடியேனைப் பொருளாக வளித்ததிரு முகக்கருணை
முடிவேதென் றறிந்திலேÓ னெனமொழிக டடுமாறக்
கடியேறு கொன்றையார் முன்பரவிக் களிகூர்ந்தார்.
94
(இ-ள்) படியேறு...வீழ்ந்து - உலகில் ஏற்ற முறும் புகழினையுடைய சேரர்பிரானும் திருமுன்பு நிலத்தின் மேல் விழுந்து; அடியேனை...என - அடியேனையும் ஒரு பொருட் படுத்தித் திருமுகம் அளித்தருளிய கருணைப் பெருக்கின் எல்லையினை அளவிட அறியேன் என்று சொல்லித் துதித்து; மொழிகள்...களிகூர்ந்தார் - சொற்கள் எழமாட்டாமற் நாத் தழுதழுக்க மணம் விரிந்த கொன்றை சூடிய இறைவர் திருமுன்பு துதித்து மகிழ்ச்சி பெருகினார்.
(வி-ரை) “அடியேனை...அறிந்திலேன்Ó என - தம்மையும் ஒரு பொருளாகக் கொண்டு திருமுகம் கொடுத்தருளிய இறைவரது பெருங்கருணை வெள்ளத்தினையே எண்ணி எண்ணித் திளைத்தது. இக்கருணை யளித்த இறைவரை வணங்கு தற்கென்று எண்ணியே சேரர் பிரானார் நம்பிகளுடன் இத்தலயாத்திரையிற் பின்றொடர்ந்தருளினர் என்பது முன் (3829) உரைக்கப்பட்டது காண்க. அக்கருணையினையே பாராட்டித் துதித்தனர்.
மொழிகள் தடுமாறுதல் - மீதூர்ந்த அன்பின் மெய்ப்பாடுகளுள் ஒன்று; “இத்தனையும் எம்பரமோ?Ó (தேவா); 2125-ம் பார்க்க.
திருமுகம் அளித்த கருணை என்க. முடிவு - அளவு; எல்லை.