பாடல் எண் :3850

“கோத்திட்டைÓ யென்றெடுத்துக் கோதிறிருப் பதிகவிசை
மூர்த்தியார் தமைவணங்கி முக்கோக்க டம்முன்பே
ஏத்தியவண் டமிழ்மாலை யின்னிசைபா டிப்பரவிச்
சாத்தினார் சங்கரனார் தங்குதிருப் பரங்குன்றில்.
103
(இ-ள்) கோத்திட்டை...வணங்கி - “கோத்திட்டையும்Ó என்று தொடங்கிக் குற்றமற்ற திருப்பதிக விசையினாலே சிவபெருமானாரை வணங்கி; முக்கோக்கடம் முன்பே...தமிழ்மாலை - மூவேந்தர்களின் முன்பாக வளப்பமிக்க தமிழ்மாலையினை; இன்னிசை...பரங்குன்றில் - இனிய இசையாலே பாடித் துதித்துச் சங்கரனார் தங்கியருளும்திருப்பரங்குன்றத்தில் (இறைவருக்கு வன்றொண்டர்) சாத்தினார்.
(வி-ரை) “கோத்திட்டைÓ என்று எடுத்து - “கோத்திட்டைÓ என்று தொடங்கி; எடுத்தல் - தொடங்குதல். இது பதிக முதற்குறிப்பு. கோத்திட்டை - கோ - பரம்; திட்டை - மலை - குன்று; திட்டை - உயரமான இடம் - மேடு; இங்குக் குன்று என்ற பொருள் தந்து நின்றது.
பதிக இசை - மூர்த்தியார் தமைவணங்கி - பதிகக் குறிப்புத் திருவடிக்கீழ் ஆட்செய அஞ்சுதுமே என்பதாயினும் அதன் முகமாக இறைவரை வணங்குதல் கருத்து என்க.
முக்கோக்கள் தம்முன்பே ஏத்திய - தமிழ்ப்பெரு மூவேந்தர்களும் முன்னின்று கேட்க அவர் முன்னே பாடிய; “முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தÓ என்பது பதிகம். அகச்சான்று.
இசை - இசையினால்: இசையால் வணங்கி என்க. இசைத்திருப்பதிகத்தால் வணங்கி என்றலுமாம்,
தமிழ்மாலை - சாத்தினார் - என்க - மாலை என்றதற்கேற்பச் சாத்தினார் என்றார்.
முக்கோக்களுடன் முன்பே - என்பதும் பாடம்.