கண்டருளும் படிகழறிற் றறிவார்க்கு மொழிந்தருளிப் புண்டரிகப் புனற்சுழியற் புனிதர்கழல் வணங்கிப்போய் அண்டர்பிரான் றிருக்கானப் பேரணைவா ராரூரர் “தொண்டரடித் தொழலுÓமெனுஞ் சொற்பதிகத் தொடைபுனைவார், | 114 | (இ-ள்) கண்டருளும்...மொழிந்தருளி - தாம் கண்ட பரிசினையும் இறைவர் அருளின் பரிசினையும் கழறிற்றறிவார்க்கும் சொல்லியருளி; புண்டரிகப் புனல்...போய் - தாமரைகளையுடைய நீர்த்தடங்களைக் கொண்ட திருச்சுழியற் பெருமானை வணங்கி விடைபெற்றுச் சென்று; அண்டர்பிரான்....ஆரூரர் - தேவர் தலைவராகிய இறைவரது திருக்கானப்பேர் என்னும் பதியினை அணைவாராகிய நம்பிகள்; தொண்டர்...புனைவார் - தொண்டரடித் தொழலும் என்று தொடங்கும் திருப்பதிகத் தமிழ் மாலையினைச் சாத்துவாராய், (வி-ரை) கண்டருளும் படி - தாம் கண்டபடியினையும், இறைவர் அருளும்படியினையும்; படி தன்மை; படிகளை. வணங்கி - வணங்கி அருள் விடைபெற்று. இது மரபு. அணைவாராகிய ஆரூரர்; அணைவார் - வினைப்பெயர். அணைவார் - புனைவார் - அணையும்போது புனைவாராகி என்றதாம். “தொண்டரடித் தொழலும்Ó எனும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு; இப்பதிகம் பதியினை அணையும்போது வழியிற் பாடியருளியது; “கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோÓ என்ற பதிகக் குறிப்பும் அகச்சான்றும் காண்க. மேல்வரும் பாட்டுப் பார்க்க. தொடை எடுத்தார் - என்பதும் பாடம். |
|
|