புனவாயிற் பதியமர்ந்த புனிதரா லயம்புக்கு மனவார்வ முறச்“சித்த நீநினையென் னொடுÓமென்றே வினவான தமிழ்பாடி வீழ்ந்திறைஞ்சி யப்பதியிற் சினயானை யுரித்தணிந்தார் திருப்பாதந் தொழுதிருந்தார். | 118 | (இ-ள்) புனவாயிற்பதி...புக்கு - திருப்புனவாயிற் பதியில் விரும்பி வீற்றிருந்தருளிய இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்து; மனம்...பாடி - மனத்துள் பெருவிருப்புக் கொள்ளச் “சித்தநீநினை யென்னொடுÓ என்று தொடங்கும் வினவுதலமைந்த செந்தமிழ்த் திருப்பதிகத்தினைப் பாடியருளி; வீழ்ந்திறைஞ்சி....தொழுதிருந்தார் - நிலமுற விழுந்து வணங்கி மதயானையினை உரித்து அணிந்த இறைவரது திருவடிகளைத் தொழுது அத்திருப்பதியிலே எழுந்தருளியிருந்தார்கள். (வி-ரை) “சித்த நீநினை நினையென்னொடுÓ என்றே - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. மனஆர்வமுற - பதிகத் தொடக்கத்தாற் போந்த குறிப்பு. வினவானதமிழ் - வினவுதல் பொருந்திய தமிழ் அமைப்பு; “என்னொடு சூளறும்Ó என்ற பதிகப் பொருள் குறித்தது. பதிகக் குறிப்புப் பார்க்க. ஆர்வம்வர - என்பதும் பாடம். |
|
|