தம்பி ரானைத் தொழுதருளாற் போந்து தொண்டர் சார்ந்தணைய நம்பி யாரூ ரருஞ்சேரர் நன்னாட் டரச னாராய பைம்பொன் மணிநீள் முடிக்கழறிற் றறிவார் தாமும் பயணமுடன் செம்பொ னீடு மதிலாரூர் தொழுது மேல்பாற் செல்கின்றார், | 129 | (இ-ள்) தம்பிரானை....அணைய - தமது இறைவரை வணங்கி அருள் விடைபெற்றுப் புறம்போந்து தொண்டர்கள் சார்ந்து உடன் அணைய; நம்பியாரூரரும்....தொழுது - நம்பியாரூரரும் சேரநன்னாட்டின் அரசராகிய பைம்பொன்முடி சூடிய கழறிற்றறிவார் நாயனாரும் பயணமாக எழுந்து போந்து செம்பொன் அணிந்த நீடிய மதில் சூழ்ந்த திருவாரூரினை இறைஞ்சி; மேல்பாற் செல்கின்றார் - மேற்குத் திசையாகச் செல்கின்றார்களாகி. (வி-ரை) அருளால் - அருள் விடைபெற்று. தொண்டர் சார்ந்து அணைய - உரிய தொண்டர்கள்சார்ந்து உடன்வர - அணைய.பயணமுடன் - பயணமாக எழுந்து புறப்பட்டு. ஆரூர் தொழுது - திருவாரூர் நகரின் புறம்பு போந்து அந்நகரினைத் தொழுது. “புறம்பு போந்ததனையே நோக்கி நின்றேÓ (ஞான - புரா - 518). மேல் பால் - இவர்கள் மலைநாடு நோக்கிச் சென்ற வழி, திருவாரூரினி்ன்றும் வடமேல்பால் நோக்கிக் காவிரித் தென்கரை வழியாய்த் திருப்பெருவேளூர், திருக்குடவாயில், திருப்பழையாறை, திருநல்லூர் முதலாகிய பதிகளின் வழியே செல்லும் பழையவழி என்பதும், மேல்வரும் பாட்டிற் கோயில் பல என்பவை இவையும் இவ்வழியிற் (3877) காணும் பல பதிகளுமாம் என்பதும் கருதப்படும். இவ்வழி திருக்கண்டியூர் வழியாக மேல்பாற் செல்கின்றது. |
|
|