பாடல் எண் :3881

“பரவும் பரிÓ சென் றெடுத்தருளிப் பாடுந் திருப்பாட் டின்முடிவில்
அரவம் புனைவார் தமை“யையா றுடைய வடிக ளோÓ வென்று
விரவும் வேட்டை யுடனழைத்து, விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவு மிசையில் வன்றொண்டர் நின்று தொழுது பாடுதலும்,
134
(இ-ள்) பரவும் பரிசு ....எடுத்தருளி - பரவும் பரிசு என்று தொடங்கியருளி; பாடும்....அழைத்து - பாடுகின்ற திருப்பாட்டுக்களொவ்வொன்றன் இறுதியிலும் பாம்பினைப் பூணும் இறைவரை “ஐயாறுடைய அடிகளோ?Ó என்று பொருந்திய பெரிய ஆசையுடனே அழைத்து; விளங்கும்....பாடுவார் - விளக்கமுடைய பெருமை பூண்ட திருப்பதிகத்தினை நிரவும் பண்ணிசையமைய வன்றொண்டப் பெருந்தகையார் நின்று தொழுது பாடுதலும்,
(வி-ரை) “பரவும் பரிசுÓ என்று எடுத்தருளி - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
திருப்பாட்டின் முடிவில்...என்று - திருப்பாட்டின் - ஒவ்வொரு திருப்பாட்டினும்; முடிவில் - ஈற்றில்; மகுடமாக. “ஐயாறுடைய அடிகளோÓ என்பது பதிகம். “உடைய அடிகளோÓ என்றதனைத் தொடர்வுடைய திருவடி என்று (3879) மேல் ஆசிரியர் விளக்கி யருளுவதும் காண்க.
விரவும் வேட்டை - விரவுதல் - ஒன்றுமுள்ளத்துடன் இங்குத் தடையினை நீக்கிக் காணவும், சேரமானாரது விருப்பத்தினை முடித்துக் கொடுக்கவும் பொருந்துதல். விரவும் - சென்று சேரும் என்ற குறிப்புமாம்.
அழைத்து விளங்கும் பெருமையாவது - தூரத்தே நிற்பார்போல இறைவரை நேரே அழைத்தலும், அதற்கு அவரும் அவ்வாறே விடைகூறி ஓலிடவும் நிகழ்ந்ததனை விளங்கும் பெருமை என்றார்; அழைத்து - அழைத்த பண்பினால்; உயிர்க்குயிராய்த் தாவியுடனிருக்கும் இறைவரைத் தூர இருப்பவர்போல அழைத்தல் இதனின் விளங்கும் பெருமை.
நிரவும் இசை - நிரத்தல் - எடுத்தல் முதலிய இசைப்பகுதிகள் வரிசைப்பட ஒழுங்கின் வருதல்; இசை - பண் - காந்தார பஞ்சமம்.
நின்று - காவிரித் தென்கரையில் திருவையாற்றினை நோக்கி நின்று.
பாடுதலும், வல்லார் - ஓலம் என - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க; வன்றொண்டர் பாடவும் - வல்லார் மொழிந்தார் - எனப் பிறவினைமுதல்வினை கொண்டு முடிந்தது; பாடுதலும் அதுகேட்டு - என்க. அதுகேட்டு என்பது குறிப்பெச்சம்; கேட்டல் உபசாரம்.