இறைவர் கோயின் மணிமுன்றில் வலங்கொண்டிறைஞ்சி யெதிர்புக்கு நிறையுங் காத லுடன்வீழ்ந்து பணிந்து நேர்நின் றாரூரர் முறையில் விளம்புந் திருப்பதிக “முடிப்பது கங்கைÓ யென்றெடுத்துப் பிறைகொண்முடியார் தமைப்பாடிப் பரவிப்பெருமாளுடன் றொழுதார். | 146 | (இ-ள்) இறைவர்.....நேர்நின்று - இறைவரது திருக்கோயிலின் மணி முன்றிலினை வலமாகச் சூழ்ந்து வந்து வணங்கி எதிரே சென்று நிறையும் பெருவிருப்பினுடன் நிலமுறவிழுந்து பணிந்து எழுந்து திருமுன்பு நேர் நின்று; ஆரூரர்....எடுத்து; நம்பியாரூரர் முறைமையாகத் துதிக்கின்ற திருப்பதிகத்தினை “முடிப்பது கங்கைÓ என்று தொடங்கி; பிறைகொள்.......தொழுதார் - பிறை சூடிய திருமுடியாராகிய இறைவரைப் பாடித் துதித்துச் சேரமான் பெருமா ணாயனாருடனே தொழுதனர். (வி-ரை) இறைஞ்சி - இது திருமுன்றிலிற் செய்த வணக்கம். முன்றில் - முன்னிடம்; முற்றம்; இல் முன் என்பது; இலக்கணப் போலி. எதிர்புக்கு -எதிர் -இறைவரது திருமுன்பு. முறையில்- பதிகம் பாடி வழிபடும் முறையில் முடிப்பது கங்கை - பதிகத் தொடக்கம். பதிகக் குறிப்புப் பார்க்க. |
|
|