பாடல் எண் :3895

“நல்ல தோழர் நம்பெருமா டமக்கு நம்பி யிவÓ ரென்பார்;
“எல்லை யில்லாத் தவமுன்பென் செய்தோ மிவரைத் தொழÓ வென்பார்;
“செல்வ மினியென் பெருவதுநஞ் சிலம்பு நாட்டுக்Ó கெனவுரைப்பார்;
“சொல்லுந் தரமோ பெருமாள்செய் தொழிலைப் பாரீÓ ரெனத்தொழுவார்;
148
(இ-ள்) நல்ல தோழர்.....இவர் என்பார் - சிலர், நமது அரசராகிய பெருமாளுக்கு இவர் நல்ல தோழர் என்பார்கள்; எல்லை....தொழ என்பார் - இவரைக் கண்டு தொழப் பெறுதற்கு அளவில்லாத தவம் முன்பு நாம் என்ன செய்தோம்? என்பார்கள்; செல்வம்..என உரைப்பார் - நமது மலைநாட்டுக்கு இனிப் பெறவேண்டிய வேறு செல்வம் என்னவுளது? என்று சொல்வார்கள்; சொல்லும்....எனத் தொழுவார் - சொல்லுகின்ற அளவில் அடங்கும் தாமோ பெருமாள் செய்யும் தொழில்? அதனைப் பாரீர் என்று தொழுவார்கள்.
(வி-ரை) நல்லதோழர்.....தமக்கு நம்பியிவர்- சேரமான்றோழர் என்ற நிலைபற்றி வாழ்த்தியது; இவர்கள், அரசர் தாம் மேற்கொண்டு செய்த உபசாரம் தோழமை முறைபற்றிச் செய்ததாம். என்று கொண்டனர். இவர் ஒரு சாரார்; பருப்பொருளுணர்ந்தார்.
எல்லை......தொழு - அவரை மறுத்து இச்செயல் அவ்வாறு தோழமையாலன்று; வழிபடும் வகை பற்றியது; நாமும் இவரைத் தொழும் பேறு அளவற்றதாகிய முற்செய் தவத்தாற் பெற்றோம் எனத் தாம் பெற்ற பேறு பற்றி ஆண்டானடிமைத் திறமாக வாழ்த்தினர் மற்றொரு சாரார். இவர் நுண்பொருளுணர்ந்தார்.
செல்வம் நாட்டுக்கு நமக்கேயன்றி நமது மலைநாட்டுக்கே இனிப் பெறும் பேறு வேறின்றென அவரை அனுவதித்து மேலும் தொடர்ந்து கூறி வாழ்த்தினர் பிறிதொரு சாரார். இதுவே முடிந்த பொருள் என அதிநுண் பொருள் உணர்ந்தாரிவர்.
செல்வமினி என்பெறுவது? வினாவகையாற் கூறியது வேறில்லை என உறுதிபயத்தற்கு. சிலம்புநாடு - மலைநாடு; உரைத்தல் - எடுத்து விளக்குதல்.
பெருமாள் செய்தொழில் - பின்னிருந்து கவரி வீசுதல்; சொல்லும் தரமோ - நன்னெறி நான்கினுக்கும் இச்செயல் ஒக்கும் என்பது குறிப்பு. கூறவொண்ணாத பெருமையுடையது; இஃது ஆண்டவன் பணியேயாகி முடியும் நிலைக்குறிப்பு. தொழுவார் - இஃது உலகுக்கு ஞான நன்னெறி நடந்துகாட்டிய உபதேசமாதலின் தொழுதனர் என்க.