பாடல் எண் :3897

கழறிற் றறியுந் திருவடியுங் கலைநா வலர்தம் பெருமானாம்
முழவிற்பொலியுந்திருநெடுந்தோண்முனைவர்தம்மை யுடன்கொண்டு்
விழவிற் பொலியு மாளிகையில் விளங்கு சிங்கா சனத்தின்மிசை்
நிழறிக் கொளிரும் பூணாரை யிருத்தித் தாமு நேர்நின்று.
150
(இ-ள்) கழறிற்றறியும் திருவடியும்...உடன்கொண்டு - கழறிற்றறிவாராகிய அடிகளும் கலைகள் எல்லாம் வல்ல நாவலர்களின் பெருமானாராகும் முழவு போன்று விளங்கும் திருநெடுந் தோள்களையுடைய நம்பி ஆருர் பெருமானாரை அழைத்துக்கொண்டுபோய்; விழவில்...நின்று - திருவிழாச் சிறப்புடைய திருமாளிகையினுள் விளங்கும் சிங்காதனத்தின்மேல் திசையெங்கும் ஒளி வீசும் அணிகளை யணிந்த ஆரூரை வீற்றிருக்கச் செய்து தாமும் அவர் முன்னே நேர்நின்று,
(வி-ரை) திருவடி - அடிகளார் என்ற பொருளில் வந்தது; “வாகீ சத் திருவடியாம்Ó (1374)
கலைநாவலர் தம் பெருமான் - நம்பிகள்; “தமிழ்நாதன்Ó (232); “உயர்நாவலர் தனிநாதன்Ó(223); “உறழ்ந்த கல்வி யுடையானு மொருவன் வேண்டுமென விருந்துÓ (நால்வர் நான்மணிமாலை) என்று பிற்காலத் தான்றோர் இதனை விரித்துச் சுவைபடப் பாராட்டியதும் காண்க,.
முனைவர் - தலைவர், முன்னவர்,
உடன் கொண்டு - உடன் அழைத்துக்கொண்டு.
விழவிற் பொலியும் - திருநல்விழாச் சிறப்புச் செய்யப்பட்டு விளங்கும்; நம்பிகள் எழுந்தருளும் பேற்றினை இறைவர் எழுந்தருளும் திருவிழாவினும் பெரிது போற்றிச் சிறப்புச் செய்தனர் என்பது (விழவு) இன் - ஐந்தனுருபு; ஒப்புப்பொருளில் வந்தது.
சிங்காசனம் - அரசு வீற்றிருக்கும் தமது சிங்காதனம்.
நிழல் திக்கு ஒளிரும் பூணார் - நம்பிகள்; மன்னவர் திருவும் தங்கள் வைதிகத்திருவும் பொங்க என்றும் விளங்குபவராதலின் இத்தன்மை பற்றிக் கூறினார்; சிங்காசனத்தில் எழுந்தருளப் பண்ணும் நிலையாதலின் ஈண்டு அதற்கு ஏற்ப மன்னவர் திருவாகிய பூண்களின் சிறப்பினைப் பற்றி எடுத்தோதினார்.
இருத்தி தாமும் நின்று - அவரை இருக்கச்செய்து தாம் எதிரில் நின்று; இருத்துதல் -இருக்கச் செய்தல்; இவர் இருக்கச் செய்தமையால் அவர் இருந்தனர் என்பது; நேர் - எதிரில்.