செம்பொற் கரக வாசநீர் தேவி மார்க ளெடுத்தேந்த் அம்பொற் பாதந் தாம்விளக்கி யருளப் புகுலு மாரூரர் தம்பொற் றானை வாங்கி “யிது தகாÓ தென் றருளத் தரணியில்வீழ்ந் “தெம்பெற் றிமையாற் செய்தனவிங் கெல்லா மிசைய வேண்டுÓ மென, | 151 | (இ-ள்) செம்பொற் கரகநீரி..விளக்கியருளப்புகலும் - செம்பொற் கரகத்தில் மணமுடைய நன்னீரினைத் தமது தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்கத் தாம் அவரது அழகிய பொற்பாதங்களைத் தாமே விளக்கத் தொடங்கியபோது; ஆரூரர்...என்றருள - நம்பிகள் தமது பொற்பாதங்களை உள்வாங்கிÓ ழுஇது செய்தல் தகாதுழு என்றருளிச் செய்ய; ழுதரணியில்.....வேண்டுழு மென - நிலத்தில் வீழ்ந்து வணங்கி, “எமது அன்பின் தகுதிக்கேற்பச்செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் இங்கு மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்Ó என்று கூறி, (வி-ரை) கரகம் - நீர் இடையறாது வார்க்க அமைந்த சிறிய மூக்குடைய பாத்திரம். இவை மலைநாட்டில் சிறக்க வழங்குதல் இந்நாளிலும் காணலாம். வாசநீர் -இறைவர்க்கும் பெரியோர்க்கும் பாத்தியத்துக்காக விதிப்படி உள்ள நீர், மலர்களும் வாசப்பண்டங்களும் பெய்து அமைத்தல் வேண்டும் என்பது விதி; அவ்வாறு அமைக்கப்பட்ட வாசநீர். எடுத்து ஏந்த - வார்க்கும் பொருட்டு ஏந்த; தேவியர் நீர்வார்க்க அடியார்களது பாதம் விளக்கும் மரபு பற்றிக் கலிக்கம்ப நாயனார் புராணத்தும், பிறாண்டும் காண்க. தாம் - தாமே. பாதம் வாங்கி - பாதங்களை உள்ளே வாங்கிக்கொண்டு. இது - இவ்வாறு செய்தல். பெற்றிமை - அன்பின் மேலீடு ; பெருக்கு எல்லாம் - எல்லாவகை உபசரிப்பாகிய வழிபாட்டு வகைகளை எல்லாவற்றையும். எனப் பெருமாள் வேண்ட - என்று வரும்பாட்டுடன் முடிக்க. |
|
|