வன்றொண்டர் முன்னெய்தி மனமழிந்த வுணர்வினராய் “இன்றுமது பிரிவாற்றே னென்செய்கேன் யா?Ó னென்ன “ஒன்றுநீர் வருந்தாதே யுமதுபதி யின்கணிருந் தன்றினார் முனைமுருக்கி யரசாளுÓ மெனமொழிந்தார். | 158 | (இ-ள்) வன்றொண்டர்...உணர்வினராய் - வன்றொண்டராகிய நம்பிகளின் முன்னே சார்ந்து உள்ளமழிந்த உணர்ச்சியினை யுடையாராகி; இன்று.......என்ன - இன்று உமது பிரிவைத் தரிக்கலாற்றாதவனானேன்; நான் என் செய்வேன் என்று சொல்ல; ஒன்றும் நீர்..மொழிந்தார் - நீர் ஒரு சிறிதும் வருந்தாமல் உம்முடைய பதியின்கண் இருந்துகொண்டு பகைத்தவரைப் போரில் அழித்து அரசாள்வீராக என்று (நம்பிகள்) மொழிந்தருளினார். (வி-ரை) மனமழிந்த உணர்வு - மனம் நிலையழிந்து நின்ற உணர்ச்சி; இங்கு அன்புபற்றிய பிரிவாற்றாமையால் நிகழ்ந்தது. ஒன்றும் - ஒரு சிறிதும்; இருந்து - எனது பின்தொடர்தல் என்பது நீங்கி இங்கே தங்கி; அன்றினார் - பகைவர்கள்; அன்றினார் பகை முருக்கி - பகைவரைப் போரில் அழித்து வென்று; இஃது உட்பகையினையும் குறிப்பினால் உணர்த்தி நின்றது. அரசாளும் - அரசு - சிவஞான அரசு என்றதும் குறிப்பு; பின்னர் ஞான உலா அருளிச் செய்ய நின்ற வரலாற்றின் முற் குறிப்புமாம்; மேல் “அருட் சேரர்Ó “விசும்பாட்சிÓ என்பவை காண்க. |
|
|