பாடல் எண் :3906

ஆரூரர் மொழிந்தருள வதுசேட்ட வருட்சேரர்
“பாரோடு விசும்பாட்சி யெனக்குமது பாதமலர்Ó
தேரூரு நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள
நேரூரு மனக்காத னீக்கவுமஞ் சுவ“னென்றார்.
159
(இ-ள்) ஆரூரர் மொழிந்தருள - நம்பியாரூரர் முன் கூறியபடி சொல்லியருள; அதுகேட்ட அருட்சேரர் - அதனைக் கேட்ட அருளினைப் பொருந்திய சேரலனார் - பாரோடு.....பாதமலர் - எனக்கு இந்நிலவுலகத்தினோடு விண்ணுலகத்தின் அரசாட்சியுமாவது தேவரீருடைய திருவடிமலர்களேயாம்; தேரூரும்....என்றார் - ஆனால் தேர் ஓடும் நெடிய திரு வீதியினை யுடைய திருவாரூருக்குத் தேவரீர் எழுந்தருளுதற்குக் கொண்டெழுந்த நேராகிய மனக்காதலினை விலக்குதற்கும் யான் அஞ்சுவேன் என்றார்.
(வி-ரை) அருட்சேரர் - அருள் - இறைவரது திருவருள் பெற்ற.
பாரோடு......பாதமலர் - தேவரீர் “அரசாளும்Ó என்று ஆணையிட்டருளினீர்; ஆனால் நான் உட்கொண்ட குறிக்கோளாகிய அரசாட்சியாவது உமது திருவடித் தொண்டு பூண்டொழுகுவதேயாம் என்பது; பாரோடு விசும்பு ஆட்சி - இவ்வுலக அரசே யன்றித் தேவரீரது ஆணையின் குறிப்பாற் பெறப்பட்ட உட்பகை வென்று ஆளும் ஞான அரசும் என்றவாறு.
தேரூரும் நெடுவீதி - “ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரேÓ (தேவா) என்றபடி வீதிவிடங்கப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளித் திருவிழாக் கொண்டருளும் சிறப்புக் குறித்தது. அதனை ஆளுடைய அரசுகள் வணங்கவும், அதன் சிறப்பினை அரசுகள் பாடக்கேட்ட ஆளுடைய பிள்ளையார் சென்று வணங்கவும் உள்ள பெருமை குறிக்க இச்சிறப்புப் பற்றிக் கூறினார்; அரசராதலின் மனு அரசன் மகனைக் கீழே கிடத்தித் தேரூர்ந்து நீதிசெலுத்திய அரசநீதி மேன்மை குறிக்கக் கூறியதுமாம்.
நேரூரும் - நேர்மையால் ஊரப்பட்டு எழுந்தக. நேர்மையாவது - சிவனடி மறவாது செய்யும் வழிபாடு.
நீக்கவும் அஞ்சுவன் - அடியேன் பிரியாது உமது பாதமலர்களைச் சேவித்துடனிருத்தற்கு வழி யிரண்டேயாம்; ஒன்று உம்முடன் அடியேன் சென்று உடனிருப்பது; அஃது “உமது பதியின்கண் இருந்துÓ (3905) என்றதேவரீரது ஆணையால் விலக்கப்பட்டது; தேவரீரை இங்கே தங்கியருளும்படி வேண்டுவது மற்றொன்று; உமது நேரூரும் மனக் காதலை நீக்க அஞ்சுவேனாதலின் அதுவும் கூடாதாயிற்று; என்பார் நீக்கவும் அஞ்சுவன் என்றார். உம்மை, உடன் செல்ல அஞ்சுதலோடு நீக்கவும் என இறந்தது தழுவியது.