பாடல் எண் :3907

மன்னவனா ரதுமொழிய, வன்றொண்ட ரெதிர்மொழிவார்
“என்னுயிருக் கின்னுயிரா மெழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்; மதியணிந்தார்
இன்னருளா லரசளிப்பீர் நீரிருப்பீÓ ரெனவிறைஞ்ச,
160
(இ-ள்) மன்னவனார் அது மொழிய - சேர அரசனார் முன் கூறிய அவ்வாறு சொல்ல; வன்றொண்டர் எதிர் மொழிவார் - நம்பிகள் அவருக்கு மறுமொழி சொல்வராகி; என்னுயிருக்கு.......என இறைஞ்ச - எனது உயிரினுக்கும் இனிய உயிராகிய அழகிய திருவாரூர் இறைவரை வலிய நெஞ்சுடைய கள்வனாகிய நான் மறந்து இங்குத் தங்கி இருக்கமாட்டேன்; நிலவினைச் சூடிய இறைவரது இன்னருளின் துணையாலே அரசு அளிப்பீர்! நீர் இங்கு இருப்பீராக! என்று வணங்க;
(வி-ரை) மன்னவனார் - சேரலனார்; அது - முன்பாட்டிற் கூறிய அந்நிலையினை
எதிர்மொழிவார் - மறுமொழி - கூறுவாராகி; முற்றெச்சம். மொழிவார் - என இறைஞ்ச என்று கூட்டி முடிக்க. எதிர் என்றது முன் சொன்னதனையே பின்னும் அனுவதித்து விளக்கி என்ற குறிப்புடன் நின்றது.
என்னுயிருக் கின்னுயிராம் - உயிர்க்குயிராய் இயக்கும் இறைவர்; பொதுவகையால் எல்லாவுயிர்க்கும் இறைவர் உயிர்க்குயிராய் நின்றியக்கும் முதல்வராவாராயினும், தமக்குச் சிறப்பாய் உரியவர் என்பார் என் (உயிர்) என்றும், இன் (உயிர்) என்னும் அடைமொழிகள் புணர்த்தி ஓதினார்; “உயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்Ó (தேவா); “அம் முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே (பத்தரது திருவேடம் - சிவாலயம்) தயிரின் நெய்போல விளங்கி நிலைபெற்று, அல்லுழி யெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்Ó (போதம் 12 - 3ம் அதி, சிற்றுரை); என்பன முதலாக வரும் பிரமாணங்கள் காண்க. இனி, என்னுயிருக்கு என்றதில் குவ்வுருபு இன் என்னும் ஐந்தனுருபுப் பொருளில் வந்ததெனக் கொண்டு உயிரினும் இனிய உயிர் என்று உரைத்தலும் ஆம். “என்னிலும் மினியா னொருவன் னுளன்...என்னுளே நிற்குமின்னம்ப ரீசனேÓ (தேவா - அரசுகள்). இது நம்பிகள் திருவாரூர்ப் பெருமான்பாற் கொண்ட செறிந்த அன்பு நிலை குறித்தது.
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் - கள்வனாகி - என்க. மறந்திருப்பின் கள்வனாவேன் என்பது. மறந்து இருத்தலாவது நேரிற்கண்டு தொழாது இங்கு இருத்தல் என்ற பொருள் தந்து நின்றது.
இன் அருளால் அரசளிப்பீர் - இறைவர் அரசளிக்கும் படி உமக்குக் கொடுத்தருளிய வரங்களின் துணையால்; “அரசு புரக்கு மருளுண்டேல் - அறிவேன்Ó என்று விண்ணப்பஞ் செய்ய (3760), “மேவுமுரிமை யரசளித்தே - வழிபாடும் காவன் மன்னர்க் குரியனவு மெல்லாங் கைவந் துறப்பெற்றார்Ó (3761) என்ற வரலாற்றுக் குறிப்புக்களும்பட நின்றது. அருளால் மேற்கொண்ட அரசாட்சியினை விடாது செலுத்துவது கடன் என்றவாறு. இறைவர் உமக்கு அளித்த முத்துச் சிவிகையில் எழுந்தருளுதலன்றி என்னுடன் நடந்து வரலாகாதென்று ஆளுடைய பிள்ளையார் பால் மொழி்ந்த அரசுகள் கூற்று இங்கு நினைவு கூர்தற்பாலது; “நாய னாருமக் களித்தவிந் நலங்கிள ரொளிமுத்தின், றூய யானத்தின் மிசையெழுந் தருளுவீ ரென்றலும்Ó (2426).
அரசளிப்பீர் - இனியும் அவ்வாறே அரசு செய்வீராய் இருப்பீர் என்றதும் குறிப்பு.
இருப்பீர் - என்னுடன் பின்றொடராது இங்கே தங்கியிருப்பீராக.
என இறைஞ்ச - இறைஞ்சிக் கூறுதல் பின்னும் மறாமைப் பொருட்டு.