பாடல் எண் :3912

திருமுருகன் பூண்டியயற் செல்கின்ற போழ்தின்கட்
பொருவிடையார் நம்பிக்குத் தாமேபொன் கொடுப்பதலால்
ஒருவர்கொடுப் பக்கொள்ள வொண்ணாமைக் கதுவாங்கிப்
பெருகருளாற் றாங்கொடுக்கப் பெறுவதற்கோ வருவறியோம்ந
165
(இ-ள்) திருமுருகன்பூண்டி....போழ்தின்கண் - திருமுருகன் பூண்டியின் பக்கத்திலே செல்கின்ற போதிலே; பொருவிடையார்...கொடுப்பதலால் - பொருகின்ற விடையினையுடைய இறைவர் நம்பிகளுக்குத் தாமே பொன்கொடுத்தருளுவதல்லாமல் ஒருவர்.....ஒண்ணாமைக்கு - வேறு எவரொருவரும் கொடுப்ப அவர் கொள்ள ஒண்ணாது என்ற தன்மையினைக் காட்டுதற்கு; அது....பெறுவதற்கோ - அதனைத் தாம் வாங்கிக் கொண்டு பெருகும் திருவருளினால்தாமே கொடுப்பதற்கு அவர் பெறுவதற்குமாக வரும் நிலைகூடுதற்காகவோ; அது அறியோம் - அதனை நாம் அறியமாட்டோம்.
(வி-ரை) அயல் செல்கின்ற - பக்கத்தில் அணைகின்ற. பொரு விடையார் - வாங்கித் (மீளத்) தாம் கொடுப்பதற்கோ - என்க.
மீள - என்பது சொல்லெச்சம்.
தாமே....பெறுவதற்கோ - நம்பிகளுக்கு வேண்டும்போ தெல்லாம் தாமே பொன் கொடுத்தருளியுள்ளார்; மீளவும் வேண்டின் தரவுள்ளார். திருப்புகலூர்த் திருப்பாச்சி லாச்சிராமம், திருமுதுகுன்றம் என்ற தலங்களின் முன் நிகழ்ந்தவைதாண்க; ஆதலின் பிறர்பாற் பொன் பெறுதல் வேண்டப்படுவதன்று என்றதைக் காட்டும்பொருட்டு அப்பொருளைத் தாம் வாங்கித் தமதாக்கி மீளத் தாமே கொடுக்க - அவர் பெறுவதற்காகவோ - திருவுள்ளங் கொண்டருளியது; ஓகாரம் வினா ஐயப்பாடு குறித்தது. இறைவரருட் செயல்களை யாவர் அறிய வல்லார் என்றபடி; “இவர் தன்மை யறிவாரார்?Ó “ஆட்பாலவர்க் கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா?Ó என்பன முதலிய திருவாக்குக்கள் காண்க; ஆயின் சேரமானாரது பொருள்களைப் பிறர் பொருளாக இறைவர் திருவுள்ளங் கொண்டருளினரோ? எனின், அற்றன்று; “அவர்பால் பத்திரனாருக்குத் திருமுக மருளியமையால் அது திருவுள்ளக் கிடையன்று; பின்னை என்னையோ? எனின் பொருள் தருதல் என்ற தொழில் தமதாகவே நிகழ்தல் வேண்டுமென்பது குறிப்பாம் போலும்! ஒண்ணாமைக்கு - ஒண்ணாமையினைக் காட்டுதற்கு; ஒன்றாமை என்பதன் மரூஉ. அதுவாங்கி -அப் பொன்னினைத் தாம் கைப்பற்றி.
அது அறியோம் - இஃது ஆசிரியர் வாக்கு. பின்னை இவ் வையப்பாட்டினைத்தானும் சொல்லப் புகுந்த தென்னையோவெனில்? சிலமந்தமதிகள், இறைவர், உயிர்களின் பக்குவ பேதம் பற்றிச் செய்யும் பல்வகை யருளிப்பாடுகளைப்பற்றி பலவாறும் எண்ணி அபசாரப்பட வருமாதலின் அதனை நீக்கி உலகை வழிப்படுத்தற் கென்க.
பெறுவதற்கோ அது அறியோம் - இவ்வாறு ஐயப்பாடாகக் கூறினும் இதுவே திருவருள் வெளிப்படுமாறு என்பது ஆசிரியரது தெய்வக்கவி நோக்கினால் அறியத் தக்கது. திருவருள் உண்மைகளைக் கண்டு இவ்வாறு காட்டியருளுதல் ஆசிரியரது மரபுமாம். “தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும் பிள்ளைமைதானோÓ (1961; “ஆய பொழுது தம்பெருமா னருளா லேயோ மேனியினி லேயு, மசைவி னயர்வரலோ வறியோம்Ó (1891); என்றவை ஈண்டுக் கருதத் தக்கன; அவ்விடங்களில் இருநிலைகள் கூறி முதற்கண் வைப்பு முறையால் தமது தெய்வத் திருவுள்ளக் கருத்திது வென்று கருதவைத்தார். ஈண்டு அங்ஙனமன்றி ஐயப்பாடு தோன்றக் கூறி ஒன்றே துணிய வைத்த கவிநயமும் கண்டுகொள்க. பெருகருளால் - இவ்வேடுபறி, நம்பிகள்பாற் தோழமை பற்றி இறைவர் கொண்ட அருட்பெருந் திறமே யாம் என்பது.
சேர்கின்ற போழ்தின் - என்பதும் பாடம்.