பாடல் எண் :3914

வில்வாங்கி யலகம்பு விசைநாணிற் சந்தித்துக்
“கொல்வோமிங் கிட்டுப்போÓ மெனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங் கவர்ந்துகொள, விரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டா ராரூரர் மருங்கணைந்தார்.
167
(இ-ள்) வில்வாங்கி....குத்தி - வில்லை வளைத்து அலகுடைய அம்புகளை விசையிற் செலுத்தும் நாணிலே பூட்டி “இப் பொதிகளை இங்கு இட்டுச் செல்லுங்கள்Ó இல்லையேல் உங்களைக் கொல்வோம்Ó என்று கோபமுடன் குத்தி; எல்லையில்...கொள - அளவில்லாத நிதியங்களை யெல்லாம் கவர்ந்து கொள்ள; இரிந்து.....மருங்கணைந்தார் - பறிக்கப்பட்டவர்களாகிய சுமையாட்கள் சிதறி ஓடிநம்பிகள் பக்கம் சேர்ந்தார்கள்.
(வி-ரை) வாங்கி - வளைத்து; அலகு - அம்புகளின் ஈர்க்காகிய பகுதி; அலகம்பு - அலகுள்ள ஒருவகை அம்பு என்பாருமுளர்; “வெஞ்சிலைÓ- “வில்லைக்காட்டி வெருட்டிÓ (பதிகம்.)
விசை - விசையை அளிக்கும்; அம்புக்கு விசையிற் செல்லும் சத்தியைக் கொடுப்பதாகிய நாண்; விசையாக என்றலுமாம்; சந்தித்தல் - தொடுத்தல்.
இங்கு இட்டுப் போம்; (இடாவிடில்) - கொல்வோம் என்க. இடாவிடில் என்பது குறிப்பெச்சம்; “விரவிலாமை சொல்லிÓ (பதிகம்); குத்தி - நிலத்திற் குத்தி; பரிசனங்களைக் குத்தி என்றது பிழை; “திடுகு மொட்டெனக் குத்தித் கூறை கொண்டுÓ (பதிகம்). “வில்லைக்காட்டி வெருட்டிÓ என்பது பதிகம்.
கொள - கைக்கொண்டு அகல.
இரிந்து - சிதறி; பறியுண்டார் - பறிக்கப்பட்டார். பரிசனங்கள் என்பது வருவிக்க. பறிசெய்த பரிசாவன, குத்தி - வில்லைக்காட்டி - வெருட்டி - மோதி - முதலாக வரும் பதிகப் பகுதிகளாற் காண்க.
ஆரூரர் மருங்கணைந்தார் - பறியுண்ட பரிசனங்கள் பின்னாக வரும் ஆரூரர்பால் அணைந்தனர்.