உருகியவன் பொடுகைகள் குவித்துவிழுந் துமைபாகம் மருவியதம் பெருமான்முன் வன்றொண்டர் பாடினார் “வெருவுறவே டுவர்பறிக்கும் வெஞ்சுரத்தி லெத்துக்கிங் கருகிருந்தீÓ ரெனக் “கொடுகு வெஞ்சிலைÓயஞ் சொற்பதிகம். | 170 | (இ-ள்) உருகிய....விழுந்து - மனமுருகிய அன்பினோடு கைகளைச் சிரமேற்குவித்து நிலமுற விழுந்து; உமைபாகம்...முன் - உமை அம்மைபாகம் பொருந்திய தமது பெருமானது திருமுன்பு; “வெருவுற...இருந்தீர்Ó என - அச்சம் பொருந்த வேடர்கள் வழிபறிக்கும் வெவ்விய காட்டில் எத்துக்கு இங்குப் பக்கத்தில் இருந்தீர்? என்ற கருத்துடைய; கொடுகு....பதிகம் - கொடுகு வெஞ்சிலை என்று தொடங்கும் அழகிய சொற்பொருள்களைப் பொருந்திய திருப்பதிகத்தினை; வன்றொண்டர் பாடினார் - வன்றொண்டப் பெருந்தகையார் பாடி யருளினார். (வி-ரை) உமைபாகம் மருவிய தம் பெருமான் முன் - பதிகத்து, இடுகு, நுண்ணிடை மங்கை தன்னொடும்Ó - “முயங்கு பூண்முலை மங்கையாளொடும்Ó “ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்Ó, “பந்தணை விரற்பாவை தன்னையொர் பாகம் வைத்தவனைÓ என்று பலவாறும் அம்மையுடனிருக்கும் இத்தன்மை பற்றிப் போற்றியதனைக் குறித்து ஆசிரியர் எடுத்துக்காட்டியவாறு. உருகிய அன்பொடு - “சிந்தையிற் சிவதொண்டன்Ó (பதிகம்). வெருவுற....என - பதிகக்கருத்தும் குறிப்புமாம். பதிகமகுடமும் பார்க்க. கொடுகு வெஞ்சிலை - பதிக முதற் குறிப்பாகிய தொடக்கம். அஞ்சொல் - அழகிய சொல்லும், பொருளும், சொல்லாற்றலாற் பெறும் உட்குறிப்புக்களும் உடைமை குறித்தது. பதிகம் - பாடினார் என்க. வன்றொண்டர் - வன்மைபேசிப் பெற்ற அத்திருப் பெயருக்கேற்ப, ஈண்டும் பேசிய திறம் குறிக்க இத்தன்மையாற் கூறினார். |
|
|