சென்றுசிவ காமியார் கொணர்திருப்பள் ளித்தாமம் அன்றுசித றுங்களிற்றை யறவெறிந்து பாகரையுங் கொன்றவெறி பத்தரெதி “ரென்னையுங்கொன் றருளுÓமென வென்றிவடி வாள்கொடுத்துத் திருத்தொண்டின் மிகச்சிறந்தார். | 15 | (இ-ள்) சென்று....அற எறிந்து - சிவகாமி யாண்டார் என்னும் அடியவர் சென்று கொணர்ந்த திருப்பள்ளித் தாமத்தை அன்று அவர் கையிற் பறித்துச் சிதறிய பட்டத்து யானையினைக் கொன்று வீழ்த்தி; பாகரையும்...எதிர் - பாகர்களையும் கொன்ற எறிபத்தர் எதிரே; என்னையும்.....கொடுத்து - யானை செய்த இவ்வபராதத்துக்கு இவற்றாற் போதாது, என்னையும் இதனாற் கொன்றருளும் என்று இரந்து வெற்றிபொருந்திய தமது வடிவாளினை நீட்டி; திருத்தொண்டின் மிகச் சிறந்தார் - திருத்தொண்டின்றிறத்திலே மிகச் சிறந்து விளங்கினார். (வி-ரை) இங்குக் கூறியது எறிபத்த நாயனார் புராணத்துள் வந்ததும், இந்நாயனாரது சரிதத்தின் முற்பகுதியுமான வரலாறு; அங்கு விரித்தமையால் இங்குச் சுருக்கிச் சுட்டிக் கூறியமைந்தார். சிவகாமியார் சென்று - என்றும், சென்று சிதறும் களிற்றை என்றும், (எறிபத்தர்) சென்று எறிந்து என்றும் கூட்டி உரைக்கும்படி சென்று - என்பது முதனிலைத் தீபமாய் நிற்பது காண்க. சிவகாமியார் - சிவகாமியாண்டார் என்னும் அடியவர்; பூத்தொண்டு செய்பவர். “புண்ணிய முனிவர்Ó (558); சென்று கொணர் திருப்பள்ளித்தாமம் - (559 - 560.) “பறித்தமலர் கொடுவந்துÓ - “கடிமலர் தூயன தாங்கொணர்ந்துÓ (தேவா). சிதறும் - களிற்றை - பூக்கூடையினை அவர் கையினின்றும் பறித்துச் சிதறும் யானை; அரசரது பட்டத்து யானை - “பட்டவர்த் தனமாம் பண்பு, பெற்றவெங் களிறுÓ (561 - 562 - 563). களிற்றினை எறிந்து பாகரையுங்கொன்ற - 572 - 575 பார்க்க. என்னையும்.....கொடுத்து - 589 - 592 பார்க்க. திருத்தொண்டின் மிகச் சிறந்தார் - அரசச் சிறப்பினும் தொண்டின் சிறப்பு மிக்கது - மேம்பட்டது என்ற குறிப்பு. அன்று - முன்னாள். முன் (3955) கூறிய அரசு முறை நிகழ்வதற்கு முன்பு; முன் முறை கருவூரில் வந்தணைந்திருந்தபோது; “மாநவமி முன்னாள்Ó (561). வென்றி வடிவாள் - பகைவர்களை வென்றதோடன்றி அடிமைத் திறத்திலும் இந்தவாள் நீட்டும் செயல் இவருக்கு வென்றி பெறக் கருவியாய் உதவிற்று என்பது குறிப்பு. வென்றி - பகைவரை எறிந்தவென்றியும் தொண்டரைப் பணிந்தவென்றியும். மிக - முன்னையினும் மிக. குறிப்பு : இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை. |
|
|