பாடல் எண் :3958

“ஆங்கவன்யா?Ó ரென்றருள, “வதிகனவ னணித்தாக
வோங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவாÓ னெனவுரைப்ப,
“வீங்குநுமக் கெதிர்நிற்கு மரணுளதோ? படையெழுந்தப்
பாங்கரணந் துகளாகப் பற்றறுப்பீÓ ரெனப்பகர்ந்தார்.
17
(இ-ள்) ஆங்கவன் யார் என்றருள - அத்தகைய அவ்வரசன் யாவன்? என்று வினவியருள; அதிகன்.....எனவுரைப்ப - அவன் அதிகன் என்பவன்; ஓங்கும் மதில் சூழ்ந்த மலை அரணத்தின் உள்ளே தங்குவான் என்று மந்திரிகள் சொல்ல; ஈங்கு....எனப்பகர்ந்தார் - இவ்விடத்தில் உங்களுக்கு எதிராக நிலைத்துநிற்கும் அரணும் உளதோ? படையெடுத்து எழுந்து அந்தப் பாங்கு உடைய அரணத்தைத் துகளாகச் செய்து அவனது காவலை அழிப்பீராக என்று கட்டளையிட்டருளினர்.
(வி-ரை) ஆங்கு - அத்தன்மையுள்ள.
அவன் - அதிகன் என்க. அதிகன் என்பது அவன் பெயர்; அவன் பெயர் அதிகன், அதியமான் நெடுமானஞ்சி, என்று புறநானூறு முதலிய பழந்தமிழ் நூற்களில் வழங்கும். கொங்குநாட்டின் கீழ் பாகங்களை ஆண்டனர் இக்குறுநில மன்னர் மரபினர். இவர்களுக்குத் தகடூர் தலைநகராயிருந்தது. தகடூர் சேலம் சில்லாவில் தர்மபுரி என வழங்கும் நகரம். கொல்லிமலை (சேலம் சில்லாவின் தென்பாகம்), குதிரை மலை (கோயமுத்தூர் சில்லாவின் உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் உள்ளது) என்பன இவனது மலையரணங்கள் - இவன் பெருமுடி மன்னர்களுக்கும் அடங்காதவனாய்ச் சேர சோழ பாண்டியருள்ளிட்ட எழுவரோடும் பகைத்து அவர்களுடன் போர் புரிந்தவன் என்று புறநானூறு அறிவிக்கின்றது.1 இவனது மேற்கூறிய நகரமும் மலைகளும் சோழரது தலைநகரமாகிய கருவூருக்கு அணிமையில் உள்ளன. நெடுஞ்சடையன் என்னும் பாண்டியன் அதியமானை அயிரூர் -புகழியூர் - என்ற இரண்டிடங்களிற் போரிற்புறங்கண்டான் என்று அறியப்படுகின்ற அவ்விரண்டு (அயிலூர் புகழூர் - என வழங்கப்படுகின்றன) ஊர்களும் கருவூரின் பக்கத்தில் உள்ளன; அவன் இப்போரிலும் உடைந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். (3970)
அணித்தாக ஓங்கெயில் சூழ்மலை அரணம் - தகடூரும், கொல்லிமலை குதிரை மலைகளும்; முன் கூறியவை காண்க.2
நுமக்கு எதிர்நிற்கும் அரணுளதோ? - நுமக்கு - சேனைப் பெருவீரமும் வலிமையும் வாய்ந்த உமது படையின் விறலுக்கு; எதிர்நிற்றல் - பகைத்து நிலை நிற்றல்; அரணும் உளதோ - என்று உம்மை விரிக்க. ஓகாரம் வினா; எதிர்மறை இன்மை குறித்தது. இஃது அரசர்கள் தமது சேனை வீரர்களைத் தேற்றி வீரம் விளைக்கும் மரபுகளுள் ஒன்று. தமது படை வலிமையினை அமைச்சர்கள் மேல் ஏற்றிக்கூறியது அரசாட்சித் திறமாகிய மதியூகம்.
படைஎழுந்து....பற்றறுப்பீர் - இது அமைச்சர்க்கு அரசர் இட்ட கட்டளை; “ஆணைÓ - (3958) துகளாக - துகளாகச் செய்து; பற்று - பற்றுக்கோடாக நின்ற அரணத்தை; அரணம் - காவல் பொருந்திய இடம்.
பற்றுவீர் - என்பதும் பாடம்.