மண்டு போரின் மலைப்பவர், துண்ட மாயிட வுற்றெதிர், கண்ட ராவி கழித்தனர், உண்ட சோறு கழிக்கவே. | 23 | (இ-ள்) மண்டு....துண்டமாயிட - மிக்க போரிலே எதிர்த்துச் சண்டை செய்பவர்கள் துண்டமாகும்படி; உற்று எதிர் கண்டர் - பொருந்தி எதிர்த்த கண்டர்கள்; ஆவி......கழிக்கவே - (தாம் எதிர்வீரர்களைக் கொல்ல) உண்ட சோற்றுக் கடனைக் கழிக்கப் போரில் பொருது தாமும் (எதிரிகள் செயலால்) உயிர்நீத்தனர். (வி-ரை) மலைப்பவர் - பொரும் வீரர்கள்; துண்டமாதல் - உடல் பலகூறுபடுதல்; துண்டம் - உடற்பகுதி; கண்டர் - கண்டம் செய்பவர்; நிர்க்கண்டகர் என்றலுமாம். ஆவி கழித்தனர் - உயிர் கழிக்கப்பட்டனர். சோறு கழித்தலாவது சோறுண்ட கடமையினைக் கழித்தல்; சோறு - சோற்றுக்கடன் என்ற பொருளில் வந்தது. ஆகுபெயர், கழித்தல் - கடமை செலுத்துதல். “செஞ்சோற்றுக் கடனின்றே கழியே னாகிற், றிண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வே றுண்டோ?Ó (வில்லி - பாரதம்) உண்ட - உண்ணப்பட்ட. துண்டமாயிடவுற்று - ஆவி கழித்தனர் - பகைவரையும் கொன்று தாமும் கொல்லப்பட்டனர். “அவனு மறிந்தன னாயினர் பலருளர்Ó (627). இதனால் காலாட் படைப்போர் கூறப்பட்டது. |
|
|