பாடல் எண் :4030

திருமலிசெல் வத்துழனி தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியிற் பேராத பேராளர்
வருமரபி லுள்ளோர்பா லெண்ணெய்மா றிக்கொணர்ந்து்
தருமியல்பிற் கூலியினாற் றமதுதிருப் பணிசெய்வார்.
9
(இ-ள்) திருமலி....பின்னையும் - திருநிறைந்த தமது செல்வப் பெருக்குத் தேய்ந்து அழிந்த பின்னும்; தம்...பேராளர் - தமது பெருமைத்தன்மையின் நிலைத்த திருப்பணியி்னின்றும் பெயராத பெருமையுடையவர்; வரும் மரபில்...இயல்பில் - தாம் வரும் அந்த மரபில் செல்வமுள்ளோர்களிடத்தில் எண்ணெய் வாங்கிக்கொண்டு போய் விற்றுக்கொடுத்து அதனியல்பினால்; கூலியினால்....செய்வார் - அவர் தரும் கூலியினைக் கொண்டு தமது திருப்பணியைச் செய்வாராகி,
(வி-ரை) திருமலி செல்வத்துழனி - திரு - வகையும், செல்வம் - தொகையும் குறித்தன. துழனி - முழக்கம் ; பெருக்குக் குறித்தது.
பின்னையும் - உம்மை உயர்வு சிறப்புநிலை.
பேராத பேராளர் - பேராத - பெயராத; பிறழாத; பேராளர் - பெருமையினை உடையார்.
வருமரபு - தாம் வரும் தயில வினையாளர் மரபு. மாறி - பெற்றுவிற்று; உள்ளோர் - செல்வமுடையார்.
கொணர்ந்து தரும் - விற்று வந்த தனத்தைக் கொண்டுபோய் கொடுக்கும்; இயல்பாவது அவ்வகையினருக்குக் கொடுக்கும் நியமம்.
செய்வார் - மாற - காதலித்தாராகிப் - பெரும்கூலி கொண்டு விளக்கிட்டார் என்று கூட்டி முடிக்க.
(வி-ரை) வளமுடையார் - “உள்ளோர்Ó என்ற முன்கூறிய கருத்து.
கூலிகொள முயலும் செய்கை - கூலிகொண்டு பணிசெய்ய முயலும் செய்கை.
மற்று அவர் - வளமுடையார்; கூலிக்கு மாறவும் கொடாமையின் அவர்கள் அருளுக்கு வேறானவர் என்பது குறிப்பு. இவ்வாறு உபகரிக்கவும் மறுக்கும் செல்வர் சிலருடைய வண்கண்மை கூறியவாறு.
தளரு மனம் - திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்த நிலையினைப் பற்றி மனந்தளர்ந்தனர்.
சக்கர எந்திரம் புரியும் - களன் - செக்கு ஆடும் இடம். பணி - அங்கு அதற்கு உரிய அவ்வேலைகள்.
காதலித்தார் - காதலித்தாராகி; முற்றெச்சம்.