வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம் பெருஞ்சி றப்புப் பெறப்பிறப் பெய்தினார் விரிஞ்சன் மான்முதல் விண்ணவ ரெண்ணவும் அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார். | 2 | (இ-ள்) வரிஞ்சையூரினில்...எய்தினார் - வரிஞ்சையூரிலே வாய்மைப் பண்புடைய வேளாளர் குலமானது பெரிய சிறப்பினையடையும்படி அதனுள் வந்தவதரித்தார்; விரிஞ்சன்.....செய்வார் - பிரமதேவன் முதலிய தேவர்களும் எண்ணுதற்கும் அரிய சிலம்பினை அணிந்த சிவபெருமானது திருவடிக்கு ஆட்செய்வாராகி; (வி-ரை) வாய்மை வேளாண் குலம் - வாய்மை - இயற்கை யடைமொழி. வேளாண் குலத்தின் பல சிறப்பியல்புகளுள்ளும் சிறந்த வாய்மையின் தன்மை பற்றியே காட்டுதல் ஆசிரியர் மரபு. அதுவே எல்லாவற்றுள்ளும் சிறந்து இறைவரது சத்தாம் தன்மை பெறுவிக்கும் பண்புடைமையால்; “நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம்Ó (440); “உயிரையும்.......சொற்ற மெய்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற மேன்மைÓ (1080). குலம் பெருஞ் சிறப்புப் பெற - வாய்மையின் விளங்கிய வேளாண் குலம் தன்னியல்பிற் சிறப்புடையது; இவர் அதில் வந்தமையால் மேலும் பெரிய சிறப்புப் பெற்றது என்பார் பெருஞ் சிறப்புப் பெற என்றார். வாய்மை - வாயின் தன்மை; வாயினுக்குரிய பண்பு வாய்மை; அஃதாவது சிவனையும் அடியாரையும் வாழ்த்துதல்; “வாயே வாழ்த்து கண்டாய்Ó (தேவா), “வாழ்த்த வாயும்Ó (தேவா.) அப்பண்பினைத் தாம் பெற்றதுமன்றிப் பிறரையும் அவ்வாறே பெறும்படி நிற்கவைத்த பண்புடைய இந்நாயனாரது சரிதவரலாற்றுக் குறிப்புப்பெற இத்தன்மையாற் கூறினார். உண்மை (உள்ளத்தின் தன்மை). மெய்ம்மை மெய் (உடல்) பின் றன்மை; வாய்மை - வாயின் தன்மை என மனம் வாக்குக் காயம் என்ற இம்மூன்றும் சிவன் (சத்து) வழியே செலுத்தற்குரியன என்று காணும் வகையில் நிற்பது இப்பண்பொன்றே யாதலின் இஃது தனிச் சிறப்புடையது. எண்ணவும் அரும் - நினைத்தற்கு மரிய, உம்மை சிறப்பு. எண்ணவும் அரும்அடி என்க. |
|
|