பாடல் எண் :4041

அத்த ராகிய வங்கண ரன்பரை
இத்த லத்தி லிகழ்ந்தியம் பும்முரை
வைத்த நாவை வலித்தரி சத்தியார்;
சத்தி யாரெனு நாமந் தரித்துளார்.
(இ-ள்) அத்தராகிய......நாவை - அத்தராகிய சிவபெருமானது அடியவர்களை இவ்வுலகில் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கொண்ட நாவினை; வலித்தரி சத்தியார் -வலிசெய்து அரியும் சத்தி வாய்ந்தவர்; சத்தியார் எனும்.... தரித்துளார் - சத்தியார் என்னும் திருநாமத்தினைத் தாங்கியவர்.
(வி-ரை) அத்தர் - கருத்தர்; தலைவர்.
அன்பரை இகழ்ந்தியம்பும் உரைவைத்த நாவை
- சிவனைப் பழித்தல் கொடிய சிவாபராதம்; அவன் அன்பரைப் பழித்தல் அதனினும் கொடியது என்பதுண்மை. அதனால் இந்நாயனார் அடியாரைப் பழித்துக் கூறும் நாவினை அரிதலைத் தொண்டாகக் கொண்டனர். அன்பரை இகழ்ந்தது அரனை இகழ்ந்ததுமாம். அங்கணரையும் அன்பரையும் என்றலுமாம்.
உரை வைத்த - உரையினை வைத்தற்கு (சொல்லுதற்கு) இடமாக வைத்த; நாவே சொல் இயம்புதற்குத் துணைசெய்யும் கருவியாம். வைத்த - வாழ்த்தற்குத் தந்த நாவில் வேறு பொருள் வைத்த நாஅரி - தவறுபட்ட அங்கத்தையே தண்டித்தல் மரபு. கலிக்கம்பர் இடங்கழியார், செருத்துணையார் சரிதங்கள் பார்க்க.
வலித்து - வலிசெய்து வென்று; இழுத்து என்றலுமாம்; அரி சத்தியார் - அரியும் சத்தி வாய்ந்தவர்; ஒருவனது நாவை அரிவதென்னின் அவனை வலிசெய்து கீழ்ப்படுத்தவல்ல திறமை யுடையோர்க்கே ஆவது என்பார் வலித்து என்றும், சத்தியார் என்றும் கூறினார். சத்தி இங்கு வன்மை - திறல் என்ற பொருளில் வந்தது. “திருந்தாரை வெல்லும் வரிவில்லவன்Ó என்று இதனைக் காரணங்காட்டி வகுத்தது வகைநூல்.
சத்தியார் - (ஆதலின்) சத்தியார் எனும் - நாமம் தரித்துள்ளார் என ஈண்டும் சத்தியினாகே என்று காரணக் குறிப்புப்படக் கூறியது காண்க. தரித்துளார் - தரித்தற் கருமை குறித்தது. ஆண்மை (4042) என்பதும் காண்க.
சத்தியால் - நாமமுந் தாங்கினார் - என்பனவும் பாடங்கள்.
2
(இ-ள்) வரிஞ்சையூரினில்...எய்தினார் - வரிஞ்சையூரிலே வாய்மைப் பண்புடைய வேளாளர் குலமானது பெரிய சிறப்பினையடையும்படி அதனுள் வந்தவதரித்தார்; விரிஞ்சன்.....செய்வார் - பிரமதேவன் முதலிய தேவர்களும் எண்ணுதற்கும் அரிய சிலம்பினை அணிந்த சிவபெருமானது திருவடிக்கு ஆட்செய்வாராகி;
(வி-ரை) வாய்மை வேளாண் குலம் - வாய்மை - இயற்கை யடைமொழி. வேளாண் குலத்தின் பல சிறப்பியல்புகளுள்ளும் சிறந்த வாய்மையின் தன்மை பற்றியே காட்டுதல் ஆசிரியர் மரபு. அதுவே எல்லாவற்றுள்ளும் சிறந்து இறைவரது சத்தாம் தன்மை பெறுவிக்கும் பண்புடைமையால்; “நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம்Ó (440); “உயிரையும்.......சொற்ற மெய்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற மேன்மைÓ (1080).
குலம் பெருஞ் சிறப்புப் பெற - வாய்மையின் விளங்கிய வேளாண் குலம் தன்னியல்பிற் சிறப்புடையது; இவர் அதில் வந்தமையால் மேலும் பெரிய சிறப்புப் பெற்றது என்பார் பெருஞ் சிறப்புப் பெற என்றார்.
வாய்மை - வாயின் தன்மை; வாயினுக்குரிய பண்பு வாய்மை; அஃதாவது சிவனையும் அடியாரையும் வாழ்த்துதல்; “வாயே வாழ்த்து கண்டாய்Ó (தேவா), “வாழ்த்த வாயும்Ó (தேவா.) அப்பண்பினைத் தாம் பெற்றதுமன்றிப் பிறரையும் அவ்வாறே பெறும்படி நிற்கவைத்த பண்புடைய இந்நாயனாரது சரிதவரலாற்றுக் குறிப்புப்பெற இத்தன்மையாற் கூறினார். உண்மை (உள்ளத்தின் தன்மை). மெய்ம்மை மெய் (உடல்) பின் றன்மை; வாய்மை - வாயின் தன்மை என மனம் வாக்குக் காயம் என்ற இம்மூன்றும் சிவன் (சத்து) வழியே செலுத்தற்குரியன என்று காணும் வகையில் நிற்பது இப்பண்பொன்றே யாதலின் இஃது தனிச் சிறப்புடையது.
எண்ணவும் அரும் - நினைத்தற்கு மரிய, உம்மை சிறப்பு. எண்ணவும் அரும்அடி என்க.