ஐய மின்றி யரிய திருப்பணி மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர் வைய முய்ய மணிமன்று ளாடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர். | 6 | (இ-ள்) ஐயமின்றி...........திருத்தொண்டர் - சந்தேகமில்லாமல் அரியதாகிய திருத்தொண்டினை மெய்யினாலே செய்த வீரத்தன்மை, பொருந்திய திருத்தொண்டராகிய சத்தியார்; வையம்.......சேர்ந்தனர் - உலகம் உய்யும் பொருட்டு அழகிய திருவம்பலத்தில் ஆடுவாரது செம்மைதரும் பாதத் திருநிழலிற் சேர்ந்தனர். (வி-ரை) ஐயமின்றி - ஐயமாவது, மக்களின் நாவினை அரிந்து வலி செய்தல் தருமமாமோ என்ற ஐயமில்லாமல்; சிவாபராதத்தினைப் போக்குதலால் இது எவ்விதமாகிய சந்தேகத்திற்கு மிடமில்லாமல் சிவப்பணியேயாகும் என்ற துணிவுடன். அரிய - பிறராற் செய்தற்கரிய; “செயற்கரிய செய்வார் பெரியர்Ó (குறள்). இஃது செயற்கரியபணி என்றே எவரும் நிச்சயமாகக்கொள்ளும் என்றலுமாம். மெய்யினாற் செய்த - மெய் - உண்மை, வாய்மை, உண்மையன்பு; மெய்யினால் - உடலின் செயலாக என்றலுமாம். மெய்யால்; இன் சாரியை வீரம் - “ஆண்மைத் திருப்பணிÓ (4043); இத்திருப்பணிக்கு மிக்க வீரம் வேண்டற்பாலதாம். வையமுய்ய - “வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற , ஏராரு மணி மன்று ளெடுத்த திருவடிÓ (புராண வரலாறு). திருஅம்பலத்தின்கண் இறைவர் ஐந்தொழிற் கூத்தியற்றுதல் உலகமுய்தற் பொருட்டேயாம் என்பது. செய்ய - செம்மைதரும்; செய்ய - தாமரை மலர்போலச் சிவந்த என்றலுமாம். |
|
|