நாய னார்தொண் டரைநலங் கூறலார் சாய நாவரி சத்தியார் தாள்பணிந் தாய மாதவத் தையடி கள்ளெனுந் தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம். | 7 | (இ-ள்) நாயனார்...பணிந்து -சிவபெருமான் திருத்தொண்டர்களை நன்மை சொல்லாதவர்கள் வீழ அவர்களது நாவினை அரியும் சத்தி நாயனாரது திருவடிகளைப் பணிந்து; (அத்துணையாலே) ஆய..சொல்லுவாம் -சிவநெறி ஆகிய மாதவத்தையுடைய ஐயடிகள் என்னும் தூய காடவரது அடிமைத் திறத்தினைச் சொல்லுவோம். (வி-ரை) நாயனார் - தலைவர்; முழுமுதற் தலைவராதலின் சிவபெருமானுக்கே உரிய திருநாமம். “தில்லைநாயனார்Ó (திருவிசை - சேதி) நாயனாரையும் தொண்டர்களையும் என்றலுமாம். நலங் கூறலார் - இகழ்ந்து கூறுவார்; சொல்லவேண்டிய நன்மை கூறாமையே இகழ்ச்சியாவது என்றலுமாம். “இதமுயிர்க்குறுதி செய்தல் அகிதமற்றது செய்யாமைÓ (சித்தி - 2- 13). சாய - வீழ; பொல்லாங்கு ஒழிய. நா - அரியப்பட்டமையால் இனி இகழ்ச்சி கூற ஆற்றவிலராவார் ஆதலின் ஒழிய என்றார். ஆயமாதவத்து ஐயடிகள் - அரசாட்சியைத் துறந்து திருத்தொண்டு நயந்தாராதலின் ஆய மாதவத்து என்றார். மாதவம் - பெருந்துறவு - ஆய - மகத்தாகிய; பெரிதாகிய; திறம் - திருத்தொண்டின் சிறப்பினை. காடவர் - சோழ மரபுகளுள் ஒன்று. இது கவிக் கூற்று; ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்து வடித்துக் காட்டி மேல்வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். |
|
|