பாடல் எண் :4048

மன்னவரும் பணிசெய்ய வடநூறென் றமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா “ரரசாட்சி
இன்னÓ லென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்.
3
(இ-ள்) மன்னவரும் பணிசெய்ய -அரசர்களும் தமது ஏவல் வழியே பணிசெய்து ஒழுக; வடநூல்.....பணிசெய்ய - வடமொழியும் தென்றமிழும் முதலாக எடுத்துச் சொல்லப்படும் கலைகள் தமது வயப்பட்டு நிற்கவும்; பாரளிப்பார் - உலகங்காவல் புரிவாராகிய அவர்; அரசாட்சி........இழிச்சி - உலகம் புரக்கும் அரசாட்சி துன்பம் செய்வது என்று இகழ்ந்து நீத்து அதனை அழகிய தமது மகன் மேலதாக வைத்துப் பட்டம் சூட்டி; நன்மைநெறி...ஆயினார் - நல்ல சிவநெறியிலே நின்று திருத்தொண்டினை விரும்பிச் செய்வாராயினார்.
(வி-ரை) வடநூல்...பணிசெய்ய - என்றது இந்நாயனார் வடமொழி தென்றமிழ்மொழி யிரண்டிலும் வல்லவராய் அவ்விரு கலைகளின் றிறத்தினையும் உறுதிப் பொருளின்கட் செல்லும்படி செலுத்துதலை உணர்த்தற்கு. இப்பண்பு இந்நாயனாரருளிய க்ஷேத்திர வெண்பாவினால் அறியப்படும். இந்நாயனார், கழறிற்வார் நாயனார்போல முடிமன்னரா யிருந்தும் கலைகளினும் வல்லவராயினார். இது தமிழரசர்களின் சிறப்பு. கலை - கலைகள் பலவும்; பணி செய்தல் - கலைகளிற் றேர்ச்சி யுறுதல்.
அரசாட்சி இன்னல் என இகழ்ந்து - உலக அரசாட்சி துன்பந் தருவதேயாம் என்று அதனை இகழ்ந்து ஒதுக்கி; தன்கீழ் வாழும் எல்லா வுயிர்களுக்கும் ஐந்து வகைப் பயமும் தீர்த்து அறங்காக்கும் அருமைப்பாடு பற்றியும், தம் தம் உயிர்க்கு வீடுபேற்றுக்கு வழியாதலின்றிப் பெருந் தொடக்குக்கே வழியாகிப் பிறப்புக்கு ஏதுவாகும் நிலைபற்றியும் இன்னல் என்று துணிந்தார். “இருளுடை யுலகங் காக்குமின்னல்Ó என்பது கம்பன் பாட்டு.
இழிச்சி - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது கவிநயம்; தாம் இகழ்ந்த ஒன்றைத் தம்குமரனுக்கு ஆக்கியது தகுதியாமோ, எனின், உலகத்தின, இக்காவலுக்கு ஒருவன் வேண்டும் என்ற கடமையினைச் செய்யும் அளவேயன்றி, அஃதுயர்வான பொருள் என்பதனாலன்று என்பது குறிப்பு; இழிச்சுதல் - இறங்குதல்.
நன்மைநெறித் திருத்தொண்டு - அரசாட்சி போலன்றி நன்மை வழியிலே சென்று நன்மையே பயக்கும் என்பது..
தொண்டு நயந்தளிப்பார் - முன்னர்த் தொண்டுநெறி அரசளிப்பார் அதனை விட்டு திருத்தொண்டொன்றினையே அளிப்பார்.
ஆயினார் - ஆக்கச்சொல் மேம்பாடு குறித்தது.