தடுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை அடுமாறு செய்தொழுகு மமண்வலையி லகப்பட்டு் விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த் நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால். | 1 | (இ-ள்) தடுமாறு.......என்று - தடுமாற்றத்தை விளைக்கும் புரை நெறியினையே தவமென்று கொண்டு; தம் உடலை....அகப்பட்டு - தமது உடலை வருத்துகின்ற செயல்களைச் செய்து தீநெறி ஒழுகும் அமணரது சூழ்ச்சியினுள் அகப்பட்டு; விடுமாறு.....அடைந்த - அவ்வலையினின்றும் விடுபடும்படி தமிழ்விரகராகிய ஆளுடைய பிள்ளையாரது, வினைமாற்றிப் பிறவியறுக்கும் திருவடிகளை அடைந்த; நெடுமாறனார்...நிகழ்ந்தது - நெடுமாறனாரது பெருமையானது ஏழு உலகங்களிலும் நிறைந்து விளங்கியது; ஆல் - அசை. (வி-ரை) தடுமாறு நெறி- தடுமாற்றத்தை விளைக்கும் நெறி; தவமென்று.......ஒழுகும் - பலவாறும் உடலை வருத்துதலே தவமாமென்னும் அமணர் கொள்கையும் ஒழுக்கமும்; அடுதல் - சுடுபாறைகிடத்தல் - வெயிலினிற்றல் முதலாயின. விடுமாறு - விட்டு நீங்கும்படி. வினைமாறும் கழல் - மாற்றும் என்னும் பிறவினை மாறும் எனத் தன்வினையாய் வந்தது; “கழறொழ நினைப்பவ ரிருவினைத்துயர் போமேÓ “பிறவியென்னும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணிÓ (நம்பியாண்டார் நம்பிகள்). நிகழ்ந்தது - விளங்கியது. |
|
|