ஆயவர சளிப்பார்பா லமர்வேண்டி வந்தேற்ற் சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார், | 3 | (இ-ள்) ஆய.......பால் - அத்தன்மையாகிய அரசுசெய்பவரிடத்தே; சமர்வேண்டி......களத்து - போரினை வேண்டிவந்து எதிர்த்த வடிபுலத்து பகைவர்க்கெதிரே திருநெல்வேலிப் போர்க்களத்தில்; பாய.....கடக்கின்றார் - பரவிய சேனைக் கடலையும், வேகமாகச் செல்லும் குதிரைகளின் மிகுதியாகிய வெள்ளத்தையும், சினந்து அழிக்கும் மதயானைகளின் வரிசையினையும் பரப்பிப் போரினை வென்று கடக்கின்றாராகி; (வி-ரை) அளிப்பார் - வினையாலணையும் பெயர்; சேயபுலத்தெவ்வர் - வடபுல மன்னவர்; தென்னாட்டுக்குச் சேய்மை வடபுலமாதலின் வடபுலத்தை சேயபுலம் என்றார். நன்மைக்குச் சேய்மையார் என்ற குறிப்புமாம். அமர் வேண்டிவந்தேற்ற.....செருக்களத்து - வேண்டி - விரும்பி; இந்நாயனார் போரினை விரும்பிச் சென்றாரலர்; வடபுலமன்னன் வலிந்து வந்து மண்ணாசையாற் போரேற்றன னாதலிற், போரில் முனைந்து அவனை வெல்லவேண்டியதாயிற்று. இந் நெல்வேலிப் போர் நாட்டுநடப்புச் சரிதத்துள் சிறந்த பேர்பெற்ற நிகழ்ச்சியாம். மூர்த்தி நாயனார் புராணவரலாறும் காண்க. இவர் போரினைவிரும்பிச் சென்றார் அலர்; தற்காப்பின் பொருட்டே இதனை மேற்கொண்டார் என்பது “நிறைக் கொண்ட சித்தையா னெல்வேலி வென்றÓ என்றதன் குறிப்பாகும். பாய - எங்கும் பரவிய; படைக்கடல் - பரிமா வெள்ளம் - களிற்றின் நிரை - சேனைகள் பெரும் அளவினவாதலின் அவற்றைக் கடல் - என்றும், அவற்றிற் சுருங்கினவாதலின் பரிகளை வெள்ளம் - என்றும், யானைகள் அவற்றினும் சுருங்குதலின் நிரை - என்றும் கூறியது கவிநயம். பரப்பி - அணிவகுத்துப் பரப்பி நிறுத்தி. அமர் கடக்கின்றார் - போரினை வென்று மேற்செல்கின்றாராய்; கடத்தல் - அழித்து மேற்செல்லுதல்; |
|
|