பாடல் எண் :4078

பொன்மதில்சூழ் புகலிகா வலரடிக்கீழ்ப் புனிதராந்
தென்மதுரை மாறனார் செங்கமலத் கழல்வணங்கிப்
பன்மணிக டிரையோதம் பரப்புநெடுங் கடற்படப்பைத்
“தொன்மயிலை வாயிலார்Ó திருத்தொண்டி னிலைதொழுவாம்.
10
(இ-ள்) பொன்.....வணங்கி - பொன் பூண்ட மதில்சூழ்ந்த சீகாழிக் கதிபாராகி ஆளுடைய பிள்ளையாரது திருவடிச் சார்பினாலே புனிதராகிய தென்மதுரையில் அரசாண்ட நெடுமாறனாரது செந்தாமரை மலர்போன்ற பாதங்களை வணங்கி, (அத்துணைகொண்டு); பன்மணிகள்...தொழுவாம் - பல மணிகளையும் அலைகளாலே நீர்விளிம்பிற் பரப்புகின்ற நீண்ட கடற்கரையில் உள்ள தொன்மையாகிய மயிலாபுரியில் வாழ்ந்த வாயிலார் நாயனாரது திருத்தொண்டின் தன்மையைத் தொழுது துதித்துச் சொல்வோம்.
(வி-ரை) இச்சரித முடிப்பும், மேல்வருஞ் சரிதந் தோற்றுவாயுமாகிய கவிக் கூற்று.
புகலிகாவல ரடிக்கீழ்ப் புனிதராம்.......மாறனார் - இந்நாயனாரது சரிதசாரம்; அமண் சார்பு நீங்கி ஆளுடைய பிள்ளையாரது திரு அருளினாலே சிவச்சார்பில் மீண்டு தூய்மைபெற்ற நிலையே இவர் திருத்தொண்டர் தொகையுட் போற்றப்பெறும் தன்மை தந்தது என்பதாம்.
தென்மதுரை - வடமதுரையினின்றும் வேறு பிரிக்கத் தென் என்றார் என்றலுமாம். தினியைபு நீக்கிய விசேடணம். கடைச்சங்கப் புலவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்று இறையனாரகப்பொருள் உரை கூறும்.
பன் மணிகள் திரை ஓதம் யாப்பும் நெடுங்கடற் படப்பை - பன்மணிகள் - கடல் படுமணிகளாகிய முத்து பவளம் முதலாயின; இவற்றைத திரைஓதம் பரப்புதலாவது அலைகள் வாரிக்கொணர்ந்து கரையில் வீசுதல். ஓதத்திரை - என்க. அலைநீர் விளிம்பு. படப்பை - பக்கத்துள்ள இடம். ஈண்டுக் கடற்கரை நகரம் என்றலுமாம்.
பன்மணிகள்....கடல் - “துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதிÓ என்ற திருத்தொண்டத்தொகைக் கருத்தினை விரித்த படி.
“தொன்மயிலை வாயிலார்Ó - திருத்தொண்டத் தொகை ஆட்சி.
தொழுவாம் - தொழும் வகையாற் சொல்லுவோம். “பெருந்தகையார் தமைப் போற்றிÓ (4088) என்று முடித்துக் காட்டுதலும் காண்க.