விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் டலைமைக் குடிமுதல்வர் களங்கொண் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற்செறிந்த காதன்மிகும் உளங்கொ டிருத்தொண் டுரிமையினி லுள்ளார்; நாள்ளார் முனையெறிந்த வளங்கொ டிறைவ ரடியார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார், | 2 | (இ-ள்) விளங்ளகும்....முதல்வர் - விளக்கம் பொருந்தியம வள்ளற் றன்மை மிகுந்துள்ள வேளாளர் மரபில் தலைமையாகிய குடியில் முதல்வராய்; களங்கொள்.....உள்ளார் - விடத்தினைக் கொண்ட கழுத்தையுடைய கண்ணுதலாகிய சிவபெருமானது திருவடியிற் செறிவுடைய பெருவிருப்பம் மிகவும் மனத்துட் கொண்ட திருத்தொண்டுரிமை பூண்டுள்ளாராய்; நள்ளார்.....வாய்மையார் - நட்பில்லாதாரைப் போரில் வென்றதனால் வரும் வளங்களாகிய ஊதியத்தினைக்கொள்டு இறைவரைது அடியார்களுக்கு மாறாமல் அளிக்கும் வாய்மையினை யுடையவராய், (வி-ரை) வண்மை மிக்குள்ள வேளாண் - “வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும், தாளாளர்Ó (தேவா - ஆக்கூர் - 3); வண்மை - வள்ளன்மை - ஈதை. இது வேளாளரின் சிறப்பியல்பு. வேளாண் தலைமைக்குடி - வேளாளமரபிலே பல குடிகளுள்ளும் தலைமை பெற்ற குடியில்; முதல்வர் - முதன்மை பெற்றவர்; நாண்டாண்மை என்பது வழக்கு. காதல்மிகும் உளங்கொள் திருத்தொண்டு - திருத்தொண்டு பெருவிருப்பத்தினை மனத்துக்கொண்டு செய்யத்தக்கது என்பதாம். திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் - திருத்தொண்டினைத் தமது உரிமையாகக் கொண்டவர். நள்ளார் முனை எறிந்த வளம் - நள்ளார் - பகைவர்; தம்மிடம் வந்து பரிசு வேண்டினோரின் பகைவர்; முனையயெரிதல் - போர் வெல்லுதல்; எறிந்த வளம் - எறிந்ததனால் பெற்றவளம்; கூலியாகிய நிதியம். மாறாது - பிறழாது எந்நாளும். முதல்வர் -உள்ளார் - வாய்மையார் - மன்னுவால் (4091); கொடுத்து - அளித்து ஆற்றி - வைகினார் (4092) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிபு கொள்க. |
|
|