பாடல் எண் :4091

மாற்றார்க் கமரி லழிந்துள்ளோர் வந்து தம்பான் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினா லதனை நடுவு நிலைவைத்துக்
கூற்று மொதுங்கு மாள்வினையாற் கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த பொன்னுங்கொண்டு மன்னுவார்
3
(இ-ள்) மாற்றார்க்கு...பேசிகால் - (போரில்) பகைவர்களுக்குத் தோற்றவர்கள் வந்து தம்மிடம் பெருநிதியம் கொடுத்து தமது துணையைக் கொள்ளும்பரிசு பேசினால்; அதனை நடுவு நிலைவைத்து - அதனை நடுநிலையின் நின்று அறநெறியினை ஆய்ந்து துண்ந்; கூற்றும்...எறிந்து - இயமனும்அஞ்சி ஒதுங்கம் போர் முயற்சி யினாலே கூறிலினை ஏற்றுப் போய்ப் போர் வென்று; போற்றும்....மன்னுவார் - யாவரும் போற்றும் வெற்றியினை அடைந்து இசைந்த கூலியாகயி பொன்னையும் கொண்டு நிலைபெற வார்வாரராகி, (வி-ரை) மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்....பேசினால் - போலிரல் பகைவர்க்கு உடைந்து தோல்வுயுற்றவக்ள் தம்பால் வந்து தமது துணையை வேண்டிய அதற்குக் கூலியாக மாநிதியம் தருவதாகப் பேசினால்; மாநிதியம் - “பெருஞ் செல்வம்Ó வகைநூல்.
நடுவுநிலை வைத்து - அறநெறியிற் சீர் தூக்கி; கூலிக்காகவே எதனையும் இசைவது என்றில்லாமல் என்பதாம்.
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினை - கூற்று; இயமன்; ஆள்வினை - முயற்றி; இங்குப் போர்த்தொழில் குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு. “கூற்றொத்தீயேÓ (புறம்)
கூற்றம் ஓதுங்கும் ஆள்வைனையாவது கூற்றுவான் எவ்வகை வலியாரையும் உயிர்பிரித்தலில் வல்லவன். ஆனால் உரிய காலத்தாலன்றி அது செய்தல் இயலாது; இவர் அவன் போலவே எவ்வகை வலியோரையும் உயிர் பிரித்தலில் வல்லவர்; அதனுடைய எந்நாளிலும் அது செய்ய வல்லாந்தன்மையினை ஆள்வைனையாற் பெற்றார்; இது கண்டு கூற்றகூனும் அஞ்சி ஒதுங்குவன் என்பதாம். “ஊழையு முப்பக் கங் காண்ப ருலைவின்றித், தாழா துஞற்று பவர்Ó (கறள்).
கூலி - என்பது தமது முயற்சிக்காகப் பெறும் ஊதியம் என்ற உணர் பொருளில் வந்தது; எவ்வகை ஊதியமும் கூலியே என்னும் இது பொருளியல் நுல் உண்மைக் கருத்து;
எறிந்து - போர் வென்று; “கூலியேற்றெறிந்துÓ வகை நூலாட்சி. இசைந்த பொன் - கூலியாக இசைந்த நிதியம்; பொன் - அந்நாளில் வழங்கிய பொன் நாணயத்தால் அளவிட்ட தொகை; மன்னுவார் - நிலைபெற்ற உலக வாழ்வினை நடத்துவாராய்.