புதுமலர் மோந்த போதிற் செருத்துணைப் புனிதத் தொண்டர் “இதுமலர் திருமுற் றத்து ளெடுத்துமோந் தனளாÓ மென்று கதுமென வோடிச் சென்று கருவிகைக் கொண்டு பற்றி மதுமலர்த் திருவொப் பாடன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார். | 6 | (இ-ள்) புதுமலர்........போதில் - அவ்வாறு புதுப்பூவை மோந்த பொழுதிலே; செருத்துணை......என்று - செருத்துணையார் என்னும் தூய தொண்டனார், இந்த மலரினைப் பூமண்டபத் திருமுற்றத்தினுள் எடுத்து மோந்தனளாவாள் என்று துணிந்து; கதுமென.......பற்றி - விரைவாக ஓடிப்போய்க் கருவியினை எடுத்துக்கொண்டு வந்து பற்றிக்கொண்டு; மதுமலர்.....வார்ந்தார் - தேன் பொருந்திய தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி போன்ற அவளது மூக்கினைப் பிடித்து அரிந்தனர். (வி-ரை) செருந்துணைப் புனிதத் தொண்டர் - செருத்துணை நாயனார்; தொண்டர் - இவர் செய்த திருத்தொண்டு மேல் இவரது புராணத்துள் விரிக்கப்படுவது. இதுமலர்.....என்று - இவள் செய்த செயலினைக் கண்டு இது சிவாபராதமாம். என்றும், அதனைக் கண்ட போதே தண்டிக்கத் தகுந்ததென்றும் துணிந்து; என்று - துணிந்து; நிச்சயித்து. பற்றி - “கூந்தலைப் பிடித்து ஈர்த்துப் படியில் வீழ்த்திÓ (4124) என மேல் விரிப்பார்; இவை செருத்துணையார் செயலாதலின் ஆண்டு விரித்தல் தகுதியாம் என்பது. மூக்கினைப் பிடித்து - ஒரு கையினால் மூக்கைப் பிடித்து; வார்ந்தார் - வார்தல் - அரிதல் மதுமலர் - தாமரை; திரு - இலக்குமி; அழகும் செல்வமும் நிறைந்த தன்மை குறித்தது; உருவுவமம். |
|
|