பாடல் எண் :4103

வந்தணை வுற்ற மன்னர் மலர்ந்தகற் பகத்தின் வாசப்
பைந்தளிர்ப் பூங்கொம் பொன்று பார்மிசை வீழ்ந்த தென்ன
நொந்தழிந் தரற்று வாளை நோக்கி “யிவ் வண்டத் துள்ளோர்
இந்தவெவ் வினையஞ் சாதே யார்செய்தா?Ó ரென்னு மெல்லை,
8
(இ-ள்) வந்தணைவுற்ற மன்னர் - வந்து சேர்ந்த மன்னவர்; மலர்ந்த.......என்ன - மலர்கள் விரிந்த கற்பகத்தின் மணமுடைய பசிய தளிர்களைக் கொண்ட பூங்கொம்பு ஒன்று நிலத்தின்மேல் விழுந்ததுபோல; நொந்து......நோக்கி - வருந்தி அழிந்து அரற்றுவாளாகிய தேவியை நோக்கி; இவ்.......எல்லை - இந்தப் பூவுலக அண்டத்தில் உள்ளவர்களுள் இக்கொடிய செயலை அச்சமில்லாது செய்தவர் யாவர்? என்று கேட்டபோது,
(வி-ரை) மலர்ந்த....வீழ்ந்ததென்ன - வீழ்ந்து அரற்றும் தேவிக்கு உருவுவமை; இது அரசர் கண்ட நிலைபற்றியது. வீழ்ந்தரற்றும் அந்நிலையின் உவமை. ஈண்டு அயர்ந்து கிடத்தலின் “கொம்புÓ என்றார். அழகின் மேம்பாடும் உடன் குறித்தது. அழிந்து - செயலழிந்து. அரற்றுதல் - புலம்புதல்.
இவ்வண்டத்துள்ளோர்....என்னும் எல்லை - இந்நிலவுலகத் துள்ளோர் எவரும் இதனைச் செய்யத் துணியமாட்டார்கள்; வேறு அண்டத்தவர் தாம் வந்து செய்திருத்தல் வேண்டும் எனத் தமது வலிமையும் வீரமும் தோன்ற முழக்கியது; “வென்றவ ரியாவ ரென்றான் வெடிபட முழங்குஞ் சொல்லான்Ó (585) என்றநிலை இங்கு நினைவுகூர்தற்பாலது; எல்லை - அப்போது.