அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத் தரசளித்து மன்னியபொன் னம்பலத்து பமனிமுகட்டிற் பாக்கொங்கின் பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர், | 3 | (இ-ள்) அந்நகரத்தினில்...அரசளித்து - அந்த நகரத்திலே இருக்குவேளிர் குலத்தில் தோன்றி அரசு செய்து; மன்னிய.....அணிந்த -நிலைபெற்ற பொன்னம்பலத்தின் அழகிய முகட்டிலே ஒளியுடைய கொங்குநாட்டின் புகழுடைய எடையேறப் பெற்ற பசும்பொன்னினாலே விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து அணிந்த; பொன்.......குடிமுதலோர் - பொன்னணிகள் பூண்ட தோளையுடைய ஆதித்தச் சோழனது புகழ்தங்கிய மரபில் குடிமுதல்வராய், (வி-ரை) இருக்கு வேளிர் குலம் - சோழர் மரபினின்றும் பின்னாட் பிரிந்ததாக மேற்கொள்ளுவதொரு சிறுபிரிவு “பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்Ó (தொல் - ந. உரை). பொன்னம்பலத்து மணிமுகடு - பொன்னம்பலம் - இது சிற்றம்பலத்தின் வேறாய் அதனையடுத்துத் தென்பாலிலுள்ளது; ஐந்து அம்பலங்களுள் ஒன்று; முகடு - உச்சி. பாக்கொங்கிற் பன்னுதுலைப் பசும்பொன் - பா - கொங்கு - பொற்சன்னங்கள் மிக்க நிலப்பரப்புடைய நாடு; துலை - செறிவும் எடையு மிக்குள்ள. துலாம் என்னும் எடையுள்ள - துலாபாரமாகிய என்ற பொருள்களும் அமையும். பயில்பிழம்பர் மிசையணிந்த - விளங்கும் ஒளி பெற மேலணிந்த; முன்னிருந்த ஒளியின்மேல் இஃது ஓங்கி மேல் விளங்கும்படி; ஆதித்தன் - ஆதித்தச் சோழன்; இவர் இடங்கழியாரின் பின் வழிவழியில் வந்தவர்; இருக்கு வேளிர் குலத்தினைச் சார்ந்தவர்; இவர் கனகசபையின் முகடு பொன் வேய்ந்த செயல் கல்வெட்டுக்களால் விளங்கும். பொன்னெடுந்தோள் - வீரத்திருமகள் தங்கிய தோள்; பிழம்பு - வடிவம். துணைப்பசும் - சுடர்ப்பசும் - பிழம்பர்மிசை - என்பனவும் பாடங்கள். |
|
|