இடங்கழியா ரெனவுலகி லேறுபெரு நாமத்தார் அடங்கலர்முப் புரமெரித்தா ரடித்தொண்டி னெறியன்றி முடங்குநெறி கனவினிலு முன்னாதா ரெந்நாளுந ் தொடர்ந்தபெருங் காதலினாற் றொண்டர்வேண் டியசெய்வார், | 4 | (இ-ள்) இடங்கழியார்....நாமத்தார் - இடங்கழியார் என்று உலகத்தில் புகழ்பெற்ற பெரிய பெயரினையுடையவர்; அடங்கலர் .....முன்னாதார் - பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவபெருமானது திருவடித் தொண்டின் நெறியினையேயன்றி ஏனை முடக்கம் பொருந்திய புறநெறிகளைக் கனாவிலும் நினைக்காதவர்; எந்நாளும்.......செய்வார் - எக்காலத்திலும் தொடர்ந்த பெரிய காதலினாலே தொண்டர்கள் வேண்டிய பணிகள் எல்லாவற்றையும் செய்வாராகி, (வி-ரை) ஏறும் - புகழினாலே சிறக்கும்; அடங்கலர் - பகைவர்; முடங்குநெறி - நேர் செல்லாது முடங்கும் வழிகள்; வேதசிவாகமங்களுக்கு முரண்பட்ட புறநெறிகள். பாவநெறிகள்; (முடம் - வளைவு - குற்றம்). கனவினிலும் முன்னாதார் - மறந்தேயும் எண்ணாதவர்; நனவில் எண்ணாத தன்றிக் கனவிலும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. தொடர்ந்த - சிவத்தொடர்பாற் கூடிய. வேண்டிய - வேண்டியவற்றை யெல்லாம் வேண்டியவாறே வேண்டல் - விரும்புதல்; |
|
|