மைதழையு மணிமிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில் எய்துபெருஞ் சிறப்புடைய விடங்கழியார் கழல்வணங்கி மெய்தருவார் நெறியன்றி வேறொன்று மேலறியாச் செய்தவராஞ் செருத்துணையார் திருத்தொண்டின் செயன்மொழிவாம். | 11 | (இ-ள்) மைதழையும்.....வணங்கி - விடம் வளர்தற்கிடமாகிய அழகிய கண்டத்தினையுடைய இறைவரது வழிவழி வரும் திருத்தொண்டின் வழிபாட்டிலே பொருந்திய பெருஞ் சிறப்பினையுடைய இடங்கழி நாயனாரது திருவடிகளை வணங்கி அத்துணைகொண்டு; மெய்தருவார்........செயல் மொழிவாம் - சத்தாந் தன்மை தருவாராகிய சிவபெருமானது நெறியினையன்றி வேறொன்றினையும் மேல் என்றறியாத செய்தவராகிய செருத்துணையாரது திருத்தொண்டின் செய்கையினைச் சொல்வோம். (வி-ரை) சரித முடிபும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாம்; கவிக்கூற்று. வழித்தொண்டின் வழிபாட்டின் - சிறப்பு - அடியார்கள் அரனை வழிபட்டுத் தொண்டு செய்ய, இவர் அவ்வடியார்களின் வழிபாட்டில் நின்று அதனாற் சிறப்புப் பெற்றனர் என்று சரிதசாரங் கூறியபடி 4421. பார்க்க. வழிபாட்டின் எய்தும் - வழிபாட்டினாலே அடைந்த; 5- ம் வேற்றுமை ஏதுப்பொருட்டு. மெய்தருவார் - மெய் - சத்தாந்தன்மை; மெய்தருவார் - சிவபெருமான்; தமது சிவமாந்தன்மையினை அடியார்களுக்குச் செய்பவர்; “தான்செய்யுந் தன்மைகளும் ஆக்கியிடு மன்பர்க் கவன்Ó (களிறு - 69); நெறி - சைவநெறி; வேறொன்றும் மேல் அறியா - சிவநெறியின் கடமை செய்வதையன்றி, வேறொன்றினையும் மேலாகிய பொருளென்று அறிவினிற் குறியா நீர்மை செருத்துணையார்; சரிதக் குறிப்பாகிய தோற்றுவாயாதல் கண்டு கொள்க. மை - கருமை; |
|
|