செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தார் அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக் கொருவர்தமை நிகரில்லா ருலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையா ரெனும்பெயரார். | 1 | (இ-ள்) செருவிலிபுத்தூர்....குலத்தார் - செருவிலிபுத்தூரில் நிலை பெற்று வாழும் சிவவேதியர் திருக்குலத்தில் அவதரித்தவர்; அருவரை.......நிகரில்லார் - அரிய மலைவில்லாளியாராகிய சிவபெருமானது அகம்படிமைத் தொண்டு பூண்டொழுகும் அத்தன்மையில் தமக்கு நிகராக ஒருவரையு மில்லாதவர்; உலகத்து ..பெயரார் - உலகத்தில் பரந்து ஓங்கும் ஒப்பற்ற புகழ்நீடிய புகழ்த்துணையார் என்னும் பெயரையுடையவர். (வி-ரை) அருவரை வில்லாளி - வரை - பொன்மலை; “அருவரை வில்லிÓ வகை நூல். அகத்தடிமை.......நிகரில்லார் - அகத்தடிமைப் பண்பில் ஒப்பில்லாதவர்; அகத்தொண்டாவன; திருமேனி தீண்டித் திருமஞ்சனம் செய்தல், அலங்கரித்தல், நிவேதித்தல், பூசித்தல், கருவறை விளக்குதல் முதலாயின. உலகத்து.....புகழ்நீடு - “எங்கு நிகழ்ந்த புகழ்த்துணையார்Ó (4126.) புகழ்த் துணையார் - என்றது காரணக்குறி என்றபடி. அருவிவரை வில்லாளிக்கு - என்பதும் பாடம். |
|
|