பாடல் எண் :4129

மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனறாங்கு குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்,
3
(இ-ள்) மாலயனுக்கு.......பொழுது - மாலுக்கும் அயனுக்கும் தேடற்கரிய பெருமானைத் திருமஞ்சனமாட்டும் பொழுது; சாலவுறு.....தளர் வெய்தி - மிகவும் பொருந்திய பசி நோயினாலே வருத்தமுற்று நிலைதளர்ந்து; கோல....மாட்டாமை - அழகிய நிறைந்த நீரினை உடைய குடத்தினை தாங்க மாட்டாது; ஆலமணி....அயர்வார் - விடமணிந்த கண்டத்தினை யுடைய பெருமானது திருமுடிமீது வீழ்த்துச் சோர்வாராகி,
(வி-ரை) நிலைதளர்கல் - உடல் தடுமாறுதல்; கோலம் - அழகு; மலர் அறுகு - முதலியவை பெய்து மந்திரித்த தூய்மை நிலையே கோலம் எனப்பட்டது.
புனல் தாங்கு குடம் - நீர் நிறைந்த குடம்.
தாங்கு குடம் தாங்கமாட்டாமை - சொல்லணி; வீழ்ந்து அயர்வார் - வழுத்திச் சோர்ந்து வீழ்ந்தனர். மாட்டாமை - மாட்டாமையால்.
பசிப்பிணியால் - “உணவின்றிÓ வகை நூல். சாலவுறு - மிகப் பொருந்திய; ஒருபொருட் பன்மொழி; “சாலவுறு தவநனி கூர்மிகல்Ó
அரியானை மஞ்சனமாட்டும் பொழுது - “உமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுÓ வகைநூல்.
வருந்தியே தளர்வெய்தி - “கைசோர்ந்துÓ வகைநூல்; குடம் தாங்கமாட்டாமை - வீழ்ந்து - “கலசம் விழÓ வகைநூல்.