தந்தமர்க ளாயினார் தமக்கெல்லாந் தனித்தனியே “எந்தையார்க் கமுதுபடிக் கேற்றியநெல் லிவையழிக்கச் சிந்தையாற் றானினைவார் திருவிரையாக் கலிÓ யென்று வந்தனையா லுரைத்தகன்றார் மன்னவன்மாற் றார்முனைமேல். | 4 | (இ-ள்) தம்.....தனித்தனியே - தமது சுற்றத்தார்க ளாயினார்களவர்கள் எல்லாருக்கும் தனித்தனியே; எந்தையார்க்கு .....என்று - எமது இறைவருக்கு அமுது படிக்காகச் சேர்த்துள்ள இந்நெற்கூடுகளைத் தாம் அழிக்கும்படி மனத்தினாற்றானும் நினைப்பார்களாயின் திருவிரையாக்கலியின் மேல் ஆணை நிகழ்வதாக என்று கூறி; வந்தனையால்...முனைமேல் - வந்தனை செய்த கூறிவிட்டு அரசரது பகைவர்களது போரின் மேல் சென்றனர். (வி-ரை) தமர்களாயினார் - தாம் இல்லாத நாளில் தமது பொருள்களைக் கையாண்டு செயல் செய்யும் நிலையுடையவர்; ஆயினார் - என்றது அக்குறிப்புத் தருவது; அவர்கள்பால் நாயனார் சொல்லிச் சென்ற கருத்துமிது. தமர் - தம்மைச் சேர்ந்தவர்; சுற்றத்தார்; காரணப்பெயர்; தமக்கெல்லாம் தனித்தனியே - உரைத்து என்றுகூட்டுக. தமக்கு எல்லாம் - தம் எல்லாருக்கும் என நான்கனுருபு பிரித்துக்கூட்டி முற்றும்மை விரிக்க. ஏற்றிய - குறித்த; அழிக்க - கூடுகளை அழித்துக் கவர; சிவனுக்கு அமுதுக்கு என்று ஆக்கிய பொருளை வேறொன்றற் காக்குதல் அதனை அழித்தலேயாம் என்றபடி. சிந்தையாற்றானும் என்று உம்மை விரிக்க - நினைத்தலும் செய்ததனோடு ஒக்குமாகலின் பிழை என்பது சிந்தையில் - என்க; உருபுமயக்கம். “தீண்டுவீ ராயினெம்மைத் திருநீல கண்ட மென்பார்Ó என்புழிப்போல. இவ்வாறு சிவன்மேல் ஆணைவைத்துக் கூறுதல் அக்கால வழக்குப்போலும்; “நாதன்றன் வல்லாணைÓ (4141). அழிக்க - நினைவார் - திருவிரையாக்கலி - அழிக்க நினைவாரேனும் சிவனாணை பிழைத்தவராவர் என்பது; திருவிரையாக்கலி - சிவனது ஆணை; முன் வகை நூலின் உரைக் குறிப்புப் பார்க்க. அழிக்க - செலவழிக்க என்றலுமாம். வந்தனையால் உரைத்து - நன்மொழி பகர்ந்து அவர்களை வேண்டிக் கொண்டனர் என்பதும், நல்ல சிவதருமத்தை இன்மொழிகளாற் கூறினும் கேளாதார் தண்டிக்கப்படுதற்குரியார் என்பதும் பெற வைத்துப், பிற்சரித விளைவுக் குறிப்புப்படக் கூறியபடி. வந்தனையால் - வந்தனையோடு; ஆல் - ஒடு உருபின் பொருளது. |
|
|