எல்லாரும் புகுந்ததற்பி னிருநிதிய மளிப்பார்போல் நல்லார்தம் பேரோன்முன் கடைகாக்க, “நாதன்றன் வல்லாணை மறுத்தமுது படியழிந்த மறக்கிளையைக் கொல்லாதே விடுவேனோ?Ó வெனக்கனன்று கொலைபுரிவார், | 8 | (இ-ள்) எல்லாரும்.......காக்க - சுற்றத்தார் எல்லாரும் வந்து புகுந்ததன்பின் பெரிய நிதியம் கொடுப்பவர் போலக் காட்டி நல்லவராகிய கோட்புலியார் தமது பெயரினையுடைய காவலாளன் முன்வாயிலினைக் காவலாக நின்று காக்க; நாதன்றன்........எனக்கன்று - இறைவரது வலிய ஆணையினையும் மறுத்து அமுதுக்காக இருந்த நெல்லை அழித்து உண்ட பாவம்புரிந்த கிளைஞரை யெல்லாம் கொல்லாதே விடுவேனோ? என்று மிகச் சினந்து; கொலைபுரிவார் - கொலை செய்வாராகி, (வி-ரை) அளிப்பார்போல் - அறியாமே (4139) என்றும், இனிய மொழிபல மொழிந்து (4140) என்றும், அளிப்பார்போல் (4141) என்றும் இவ்வாறு மனமொழி மெய்களால் மாறுபட ஒழுகுதல் தகுமோ? எனின், இச்சுற்றத்தாரை வினைப்போகந் துய்ப்பித்துத் துரிசறுத்து நற்கதியடையச் செய்தற்கண் இவை வேண்டப்பட்டதென்க. “தீயவினைப் பயன் துணிப்பார்Ó என்று மேற்கூறும் கருத்தும் காண்க. இறைவரது திரோதான சத்தி தொழிற்பட்டு உயிர்களைக் கன்மபோகங்களைத் துய்க்கச் செய்யும் நிலையும் ஈண்டுக் கருதத்தக்கது. நல்லார் - கோட்புலிநாயனார்; சுற்றத்தார்க்குத் தீவினை தீர்த்து நலம் செய்ய நின்றமையால் இப்பெயராற் கூறினார்; தம்பெயரோன் - தமது பெயரினை உடைய கோட்புலி என்னும் காவல் வீரன். முன்கடைகாக்க - முன்கடை வாயிலிற் காவலாக நின்று ஒருவரும் தப்பாமே காக்க. நாதன்றன் வல்லாணை - இறைவரது திருவாணையாகிய “திருவிரையாக்கலிÓ என்பது; மறுத்த - ஆணையினைக் கடந்து அழித்த. மறுத்து அமுதுபடி அழித்த - ஆணைமறுத்த தொன்றும், சிவனமுதுக்காகிய நெல்லினை உண்டதுமாகிய இருபெருங் குற்றங்கள் என்றவாறு. மறம் - தீய பாவம்; கொல்லாதே விடுவேனோ? - ஏகாரமும் ஓகாரவினாவும் ஆகிய எதிர் மறைகள் கொன்றேவிடுவேன்; என உறுதிப் பொருள் தரும் உடன் பாடு குறித்தன. கனன்று - மிக்க சினங்கொண்டு; கனன்று கொலைபுரிவர் - மூண்டசினமின்றிக் கொலைத்தொழில் நிகழாமை குறித்தது. உரைத்துப் - புரிவார் - துணிப்பார் - துணித்தார் - என்று கூட்டி இம்மூன்று பாட்டுக்களையும் ஒரு தொடராக்கி முடிக்க. |
|
|