பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோ “னவ் வன்னந்துய்த் திலது; குடிக் கொருபுதல்வ; னருளுÓ மென, “விந்நெல்லுண் டாண்முலைப்பா லுண்டÓ தென வெடுத்தெறிந்து மின்னல்ல வடிவாளா லிருதுணியாய் விழவேற்றார். | 10 | (இ-ள்) பின் அங்கு...பிள்ளையை - அதன்பின் அங்குப் பிழைத்த ஒரு குழந்தையைச் சுட்டி; தம் பெயரோன்...... அருளும் என - தமது பெயரையுடைய காவலாளன் “இஃது அந்தச் சோற்றினை உண்டிலது; அன்றியும் ஒரு குடிக்கு ஒரு புதல்வனாகும்; வெட்டாது அருள்புரியவேண்டும்Ó என்று கூற; இந்நெல்.....உண்டது என - அன்னமுண்டில தாயினும் இந்நெல்லுண்டவளது முலைப்பாலினை உண்டது என்று கூறி; எடுத்தெறிந்து.....ஏற்றார் - எடுத்து மேலே வீசி எறிந்து மின்னுகின்ற நல்ல வடித்த வாளினால் இரண்டு துண்டாகி விழும்படி ஏற்றனர். (தாங்கினார் - துணித்தனர்). (வி-ரை) நாயனாரது திட்பமான மனநிலையினைக் காட்டுவது இத்திருப்பாட்டு. பிழைத்தது - நாயனாரது கொலைவாளுக்குத் தப்பிப் பிழைத்துக் கிடந்ததாகிய; ஒரு பிள்ளை - ஒரு குழந்தை; அஃதொன்றுதான் தப்பியது என்றும், பிள்ளை ஒரே பிள்ளை என்றும் உரைக்க நின்றது. “அவ்வன்னம்.......அருளும்Ó - இஃது அக்காவலாளன் அக் குழந்தைக்காகப் பரிந்து சொல்லிய பேச்சு; காவலாளன் பேசினன் எனவே, ஏனையோர் அனைவரும் கொல்லப்பட்டொழிந்தனர் என்பது குறிப்பு. இக்காவலாளன் கூறிய காரணங்கள் இரண்டு; இப்பசுங் குழவி திருவமுக்காகிய நெல்லரிசியின் சோற்றை உண்டிலது என்பதொன்று; ஒருகுடிக்கு ஒரு குழவி என்பது மற்றொண்டு; இவற்றுள் பின்னையது ஈண்டைக்கேலாமையின், அதனை விடுத்து முன்னையதற்கே நாயனார் விடை கூறி மேற் செயல் செய்கின்றார். அந்த விடையாவது :- அவ்வன்னத்தைத் தான் உண்ணாவிடினும் அதனை உண்டவளது முலைப்பாலினை உண்டு வளர்ந்தது; அம் முலைப்பால் அவ்வன்னத்தின் சாரமாய் உள்ளது; அச்சிவாபராதம் இக் குழவியின் உயிரினையும் பற்றும்; ஆதலின் ஏனையோரிற் போல அதனைச் சேதித்து வினையினை ஒழித்தல் வேண்டும் என்பதாம். வினைப்பவம் துணிப்பதன்கண் வயதிற் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி எல்லா வுயிரும் ஒன்றுபோலவே பொறுப்பேற்பர் என்பது ஞானநூன் முடிபு. வயதின் இளமை பற்றியும், எண்ணாது செய்தல் என்பது பற்றியும், பிறவாறும், செய்த குற்றங்களுக்குப் பொறுப்பின்மை கூறி, மன்னிப்பதென்பது இந்நாள் உலகியற் சட்டங்களிற் காண்பது. அஃது உயிரினியல் பற்றிய கன்மப் பொறுப்புக் கேலாததாம். எடுத்தெறிந்து......ஏற்றார் - அக்குழவியை நாயனார் துண்டிக்க நிலை; குழவி கீழே கிடப்பதொரு சிறுபண்டமாதலின் கிடந்தவாறே துண்டித்தல் இயலாமையின் எடுத்தெறிந்து துண்டமாக்க வேண்டியதாயிற்று என்க. மின் நல்ல வடிவாள் - மின்னுதல் - வாளின் ஒளி; வடித்தல் - கூர்மை குறித்தது. நல்ல - நன்மை பயத்தற் குறிப்பு; எறிபத்த நாயனார் புராணத்துள் எறிபத்தர் கையிற்கொண்டது மங்கலம் பொருந்திய மழுவென்ற வரலாறும், மேல் “உன்னுடைய கைவாளால்'' என்பதும் காண்க சேய்ஞலூர்ப பிள்ளையார்தந் திருக்கையிற் கோல மழுவால்Ó (1263) என்ற கருத்தும் கருதுக. இவ்விரண்டு பாட்டினாலும் நாயனார் உலகியல்பு எல்லாம் கடந்து முற்றும் சிவமே பற்றாக நின்றநிலை கூறப்பட்டன. “உலகினி லியற்கையை ஒழிந்திட் டற்றவர்க்கற்ற சிவன்Ó (தேவா) என்றபடி அந்நிலையே சிவன் வெளிப்பட்டருளும் நிலை என்பதற்கெழுந்தது மேல்வரும் திருப்பாட்டு. |
|
|