ஈசனையே பணிந்துருகி யின்பமிகக் களிப்பெய்திப் பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை மாசிலா நீறழித்தங் கருவிதர மயிர்சிலிர்ப்பக் கூசியே யுடல்கம்பித் திடுவார்மெய்க் குணமிக்கார். | 6 | (இ-ள்) வெளிப்படை. இறைவனையே வணங்கி மனமுருகி, அதனால் உள்ளூற வரும் இன்பம் மிகுதலாலே மகிழ்ச்சியடைந்து, மொழி குழறி, மார்பின்மேற் பூசிய திருநீற்றினைக் கண்ணீரின் பெருந்தாரையானது அழித்து அருவி போல வழியவும், மயிர்க்கூச்செறியவும் கூசிஉடல் நடுங்குவார்கள் மெய்க்குணமிகுந்தபத்தர்களாவார்கள். (வி-ரை) இன்பம் - மனத்துள் நிகழும் இன்ப உணர்ச்சி; மிக - மிகுதலால்; பேசின - போற்றின; வாய் - நா; “கூறுநாவேÓ (திருவா); தழுதழுத்தல் - குளறுதல்; நீறழித்தலாவது - கண்ணீர் பெருகி மார்பில் பூசிய திருநீறுகரைதல். “திருமேனி வெண்ணீற்று வண்ட லாடÓ, “மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவும்Ó. அருவிதர - அருவிபோல இடையறாது பெருக. மெய்க்குணம் - மெய்ப்பாடு; உண்மையன்பின்குணம் என்ற குறிப்புமாம். (4152) நீற்றின்மிசை வழிந்திழிய - என்பதும் பாடம். |
|
|