பாடல் எண் :4171

அன்றினார் புரமெரித்தார்க் காலய மெடுக்க வெண்ணி
யொன்றுமங் குதவா தாக “வுணர்வினா லெடுக்குந் தன்மை
நன்Ó றென மனத்தினாலே நல்லவா லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூச லார்தம் நினைவினை யுரைக் லுற்றாம்.
1
(இ-ள்) அன்றினார்.......எண்ணி - பகைவர்களுடைய புரங்களை எரித்த சிவபெருமானுக்கு ஒருகோயில் அமைக்க எண்ணி; ஒன்றும் அங்கு உதவாதாக - அதற்கு வேண்டும் நிதி ஒரு சிறிதும் அங்குக்கிடையாமற் போக; உணர்வினால்......என - நினைப்பினாலே அமைத்தலே நல்ல பணியாகும் என்று உட்கொண்டு; மனத்தினாலே...உற்றாம் - மனத்தினாலே நல்ல கோயிலை அமைத்த திருநின்றவூரில் வந்த பூசலாருடைய நினைப்பினாலாகிய வரலாற்றினைச் சொல்கின்ே்றாம். (வி-ரை) அன்றினார் - பகைவர்; “அன்றின ரரியென வருபவர்Ó (பிள்- வீழி - வியாழக்கு - திருவிரா - 6); எடுத்தல் - அமைத்தல்; கட்டுதல்; ஒன்றும் - பொருள் ஒரு சிறிதும்; முற்றும்மை.
உதவாதாக - பெறாது போக.
உணர்வினால் எடுக்கும் - மனத்தின் நினைத்தலாலே அமைக்கும்; நன்று - இதுவே சிறந்ததாகச் செய்யத்தகுந்தது.
மனத்தினாலே....செய்த - மனத்தின் செயலாற் கோயில் அமைத்த; மனத்தினாலே - செய்த என்று கூட்டுக.
நினைவினை - நினைப்பினாற் செய்த திருப்பணியினை; இப்பாடல் சில பிரதிகளில் இல்லை.
எடுக்க வேண்டி - என்பதும் பாடம்.