அருமறை மரபு வாழ வப்பதி வந்து சிந்தை தருமுணர் வான வெல்லாந் தம்பிரான் கழன்மேற் சார வருநெறி மாறா வன்பு வளர்ந்தெழ வளர்ந்து வாய்மைப் பொருள்பெறு வேத நீதிக் கலையுணர் பொலிவின் மிக்கார். | 3 | (இ-ள்) அருமறை....வந்து - அரிய வைதிக மரபு வாழும்படி அப்பதியிலே அவதரித்து; சிந்தை.....சார - சித்தத்திலே வரும் உணர்வுகள் எல்லாம் சிவபெருமான் றிருவடியிலே சாரும்படி; வருநெறி.....வளர்ந்து - வரும் வழியினின்றும் பிறழாத அன்பு வளர்ந்தோங்கத் தாமும் வளர்ந்து; வாய்மை..........மிக்கார் - உண்மைப் பொருளைப் பெறுதற்கேதுவாகிய வேதநீதிக் கலைகளை உணர்கின்ற விளக்கத்தின் மிகுந்தனர். (வி-ரை) மறை மரபு - வேதியர் குலம்; வந்து - அவதரித்து. அன்பு வளர்ந்தெழ வளர்ந்து - பிறந்த போதே சிவன்பா லன்புடன் தோன்றி அதனோடு மேன்மேல் வளர்ந்து; பூசல் - அன்பு; பூசலார் - காரணப்பெயர். வாய்மைப்பொருள் - மெய்ப்பொருள்; பெறுதல் - பெறுவித்தல். கலையுணர் பொலிவு - உணர்தலான் மிக்க விளக்கம். இது கலைகளை உணர்ச்சியிற் கொண்டொழுகுதலால் வரும் ஞான விளக்கம். உணர்வான எல்லாம் - என்றதனாற் சொல்லும் செயலும் உடன் கொள்ளப்படும். |
|
|