“நின்றவூர்ப் பூச லன்ப னெடிதுநா ணினைந்து செய்த நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோ நீயிங் கொன்றிய செயலை நாளை யொழிந்துபின் கொள்வாÓ யென்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண் டருளப் போந்தார.் | 10 | (இ-ள்) நின்றவூர்.....புகுவோம் - திருநின்றவூரில் உள்ள பூசல் என்கின்ற அன்பன் நீண்ட நாட்களாக நினைந்து நினைந்து செய்த நன்மையால் நீடும் கோயிலிலே நாளை நாம் புகுவோம்; நீ ...கொள்வாய் - (ஆதலால்) நீ இங்கு இக் கோயிலிற் பொருந்திய செய்கையை நாளைக்கழித்து வைத்துக்கொள்வாயாக என்று அருளிச் செய்து; கொன்றை.....போந்தார் - கொன்றை சூடிய நீண்ட சடையினையுடைய இறைவர் தொண்டரது கோயிலின் தாவரத்தைக் கொண்டருள எழுந்தருளினர். (வி-ரை) நெடிது நாள் நினைந்து - “நெடிது நாள் கூடÓ (4177); மனத் திருப்பணி முற்றச் செய்த நிலை காட்டியபடி. நினைந்து - நினைவினாலே. நன்று நீடு - நன்மை நீடிய; புறக்கோயில்கள்போலக் காலாந்தரத்தில் அழிவுறாது என்றும் நீடும் நன்மையுடையது அக்கோயில் என்பது. புகுவோம் - இலிங்கத் திருமேனியில் விளங்க எழுந்தருளுவோம்; வெளிப்படும் இடமாகக் கொள்வோம். இங்கு ஒன்றிய செயல் - இங்கு அத்தன்மை பொருந்த எண்ணிய செயல்; செயலைப் - பின் - கொள்வாய் - என்க. நாளை ஒழிந்து - நாளையதினத்தை நீக்கிப் பின்னர். கொள்வாய் - நிகழ்த்துவாயாக; செயல் - தாபனம். தொண்டர் கோயில் - பூசலாரது மனக்கோயில். கொண்டருளுதல் - இருப்பிடமாகக் கொண்டு விளங்க வீற்றிருந்தருளுதல். போந்தார் - மறைந்தருளினர். இவ்வருளிப்பாடு அரசருக்கு பூசலாரது திருத்தொண்டின் உயர்வினையும், பூசலாரது பெருமையினையும் அறிவித்தருளி, அதன் மூலம் உலகறியச் செய்து உய்விக்கும் திருவுள்ளக் கருணைபற்றி எழுந்தது; கழறிற்றறிவாருக்கு நம்பிகளை நினைப்பிக்கும் வகையாற் செய்த (3791 - 44) அருளிப்பாட்டினை இங்கு நினைவு கூர்க; இங்கு இரண்டு கோயில்களிலும் ஒருங்கே விளங்கும்நிலை இறைவரது தன்மைக்குக் கூடாதென்பதன்று; பூசலாரது பெருமையினை உலகறியச் செய்தலே திருவுள்ள மென்க. “தொண்டரை விளக்கÓ (4181) என மேற்கூறுதல் காண்க. பூசலன்பால் - பூசலென்பால் - சடையாரன்பர் - என்பனவும் பாடங்கள். |
|
|