அப்பதி யணைந்து “பூச லன்பரிங் கமைத்த கோயில் எப்புடை யது?Ó வென் றங்க ணெய்தினார் தம்மைக் கேட்கச் “செப்பிய பூசல் கோயில் செய்த தொன்றில்லைÓ யென்றார்;் “மெய்ப்பெரு மறையோ ரெல்லாம் வருகÓ வென்றுரைத்தான் வேந்தன். | 12 | (இ-ள்) வேந்தன் - அரசன்; அப்பதி....கேட்க - அந்தப்பதியினை யணைந்து பூசலார் என்னும் அன்பர் செய்த கோயில் எப்பக்கத்திலுள்ளது என்று அங்கு அணைந்தவர்களைக் கேட்க; செப்பிய......என்றார் - நீங்கள் சொல்லிய பூசலார், கோயில் செய்த ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்; மெய்....உரைத்தான் - அது கேட்டு, உண்மை நெறியினிற்கும் மறையவர்கள் எல்லாம் வருக என்று ஆணையிட்டான். (வி-ரை) அங்கண் எய்தினார் - தன் வரவு கண்டு அங்கு வந்த பதியவர். புடை - பக்கம். செப்பிய பூசல் - நீங்கள் சொல்லிய பூசலார் என்பவர். “மெய்ப்பெரு........வருகÓ - அங்கு எய்தினர் பூசல் கோயில் செய்ததொன்றில்லை என்று சொல்லவே, அவர் அறியார், மறையோர் அறிகுவர் என்று கொண்டு மறையோரைக் கூறினான் என்பதாம். அவருள்ளும் சிலர் அறிந்தும் சிலர் அறியாமலுமிருத்தல் கூடுமாதலின் எல்லாம் வருக என்றான் என்பதாம்; பூசலன்பர் - இருபெயரொட்டு; புடை - இடம், மெய்ப்பெருமறையோர் - ஆதிசைவர் என்ற குறிப்புப் போலும்; “சூழ்ந்த பெருமறை யவர்கு ழாமும் நம்பியும்Ó (தடுத் - புரா - 65). |
|
|