பாடல் எண் :4183

பூசுர ரெல்லாம் வந்த புரவலன் றன்னைக் காண்
“மாசிலாப் பூச லார்தா மா?Ó ரென, மறையோ ரெல்லாம்,்
“ஆசில்வே தியனிவ் வுராÓ னென்றவ ரழைக்க வொட்டான்
ஈசனா ரன்பர் தம்பா லெய்தினான் வெய்ய வேலான்.
13
(இ-ள்) பூசுரர்...காண - வேதியர்களெல்லாரும் வந்து அரசனைக்காண; மாசிலா.....ஆர் என - குற்றமற்ற பூசலார் தாம் யாவர்? என்று கேட்க; மறையோர்.....ஒட்டான் - அதற்கு மறையோர்கள் எல்லாம் அவர் குற்றமற்ற வேதியர்; இவ்வூரினர் என்றவர்களை அவரைப் போயழைக்க வொட்டாமல்; ஈசனாரன்பர்...வேலான் - இறைவரது அன்பராகிய பூசலாரிடத்தில் வெவ்விய வேலையுடைய அரசன் சென்று சேர்ந்தனன்.
(வி-ரை) பூசுரர் - நிலத்தேவர்; மறையவர்; புரவலன் - அரசன் - உலகங்காக்கின்றவன்.
என்றவர் - என்ற அவர்களை; அழைக்க வொட்டான் - அவர்கள் போய் அவரை அழைத்து வருதலை இசையாதவனாகி.
ஒட்டான் - ஒட்டாதவனாகி;
எய்தினான் - தான் சென்று சேர்ந்தனன்; வெய்ய வேலான் - வெய்ய வேலானாயினும் அன்பரிடம் விதிப்படி பணிதல் வேண்டி என்றபடி.
ஒட்டா - தீசனார் - மாசிலாப்பூசலார் - என்பனவும் பாடங்கள்.