பாடல் எண் :4186

அரசனு மதனைக் கேட்டங் கதிசய மெய்தி “யென்னே!்
புரையறு சிந்தை யன்பர் பெருமை!Ó யென் றவரைப் போற்றி்
விரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்து்
முரசெறி தானை யோடு மீண்டுதன் மூதூர்ப் புக்கான்.
16
(இ-ள்) அரசனும்.....எய்தி - அரசனும் அதைக் கேட்டு அங்கு மிக்க அதிசயம் அடைந்து; என்னே.......போற்றி - குற்றமற்ற சிந்தையினையுடைய அன்பரது பெருமை இருந்தவாறுதான் என்னே! என்று அவரைத் துதித்து; விரை.....தாழ்ந்து - மணமிக்க மாலை கீழே படியும்படி நிலத்தின் வீழ்ந்து வணங்கி; முரசு.......புக்கான் - முரசுகள் சத்திக்கும் சேனைகளுடனே மீண்டு சென்று தனது பழைய ஊரினையடைந்தான்.
(வி-ரை) அதிசயம் - பெருமிதமாக அறிந்து மகிழ்ந்த மன நிலை. “அதிசயம் கண்டாமேÓ (திருவா).
புரை அறு - புரை - குற்றம்; இங்கு நிதியின்மையாகிய குறை என்ற பொருளில் வந்தது. புரை அறு சிந்தை அன்பர் -அக்குற்றத்தைத் தமது சிந்தையின் செயலால் அறுவித்தவர் என்பது; செல்வ மென்பது சிந்தையின் நிறைவேÓ.
பெருமை - இறைவரது திருவருளுக்கு இலக்காக விளங்குதல்.
மாலைதாழ - வீழ்ந்து தாழ்ந்து - அன்பின் பெருமையின்முன் அரசரின் பெருமை தாழ்ந்துவிழ; தன்முனைப்பு அற்றநிலை.
மூதூர் - காஞ்சிபுரம். “கச்சிமூதூர்Ó (நம்பி).