பாடல் எண் :4200

நன்று மிழைத்த சிலம்பிவலைப் பரப்பை நாத னடிவணங்கச்
சென்ற யானை “யநுசிதÓ மென் றதனைச் சிதைக்கச், சிலம்பிதான்
“இன்று களிற்றின் கரஞ்சுலவிற்Ó றென்று மீள விழைத்ததனை
அன்று கழித்த பிற்றைநா ளடல்வென் ளானை யழித்ததால்.
4
(இ-ள்) நன்றும்......சிதைக்க - நன்றாகச் சிலம்பி இழைத்த வாய்நூல் வலையின் பரப்பினை இறைவரது திருவடியிறைஞ்சச் சென்ற யானை, இஃது “அநுசிதÓ மென்று சிதைக்க; சிலம்பிதான்......இழைத்ததனை - இன்று யானையின் கை சுழன்றதனால் அவ் வலயம் அழிந்ததென்று கருதி, மீண்டும் அதனை இழைக்க, (அதனை); அன்று........அழித்தது - அந்நாள் கழித்த பின்னாளில் வலிய வெள்ளானை அழித்தது .
(வி-ரை) நன்றும் - நன்றாக; வலைபரப்பு - பரவிய வலையம். அநுசிதம்.....சிதைக்க - அநுசிதம் - வாய் எச்சில்பட்ட நூலால் இழைக்கப்படுதலின் தூய்மையற்ற தென்று கொண்டது. சிதைத்தற்குக் காரணம் கூறியபடி. வாய்நீர் பற்றியது அநுசிதம் என்று கொள்கை பற்றித் திருநீல நக்க நாயனார் சரிதம் காண்க. இவ்வாறு எண்ணித் துணிந்த செயலைச் சிலம்பி தனது நன்மையாகிய கருத்தினால் யானையினது கரம் சுலவியதனாலாகியதென்று எண்ணியது; இன்று - என்ற கருத்துமிது.
இழைத்ததனை - இழைத்த அதனை என்று பிரித்து உரைத்துக் கொள்க.
அடல் - தான் அநுசிதம் என்று சிதைத்தனைச் சிலம்பிமீள இழைத்தது கண்டு சினந்து அழித்தது என்பார் அடல் என்ற அடைமொழிதந்தோதினார்.