மக்கட்பே றின்மையினால் மாதேவி வரம்வேண்ட செக்கர்நெடுஞ் சடை முடியார் திருவுள்ளஞ் செய்தலினால் மிக்கதிருப் பணிசெய்த சிலம்பிகுல வேந்துமகிழ் அக்கமல வதிவற்றி னணிமகவாய் வந்தடைய, | 8 | (இ-ள்) மக்கட்பேறு......வேண்ட - மக்கட்பேறு இல்லாமையாலே அரசமாதேவி வரத்தினைவேண்ட; செக்கர் நெடும்.......செய்தலினால் - செவ்வானம் போன்ற நீண்ட சடைமுடியினையுடைய இறைவனார் அதற்கிரங்கித் திருவுள்ளம் பற்றியதனாலே; மிக்க.....வந்தடைய - மிக்க திருப்பணியைச் செய்த சிலம்பியானது குலவேந்தன் மகிழும் தேவியாகிய அக்கமலவதியின் திருவயிற்றிலே அழகிய மகவாக வந்தடைய; (வி-ரை) மக்கட்பேறின்மையினால் - மகவில்லாமையால்; பிள்ளைப் பேறின்மையினால்Ó (875); “மகவி லாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டுÓ (2938). வரம் - வேண்டும் பொருள். செக்கர் - செவ்வானம். திருவுள்ளஞ் செய்தல் - வரந்தருதல். மிக்க திருப்பணி - மிக்க - யானை, புனலாலும் மலராலும் வழிபாட்டினளவில் ஒழுகச், சிலம்பி அதனின் மிக்கதாகிய, இறைவரது திருமுடிமேற் சருகுவிழாதபடி திருப்பணியாய் திருமேற்கட்டியிழைத்தது; வழிபாட்டினும் மிக்க என்றபடி; ஒரு முறை யானை அழிக்க மறுபடியும் என மேல் மேல் மிக்கதாய் இவ்வாறு என்றலுமாம். சிலம்பி தன் சிறிய ஆற்றலுக்கு மிகுந்த என்றலும் பொருந்தும். வாய் நூலின் மிகுதிப்பாடாகிய அளவு என்றலுமாம்; இவ்வாறு பலவும் கண்டு கொள்க. திருப்பணி - இறைவர் தனது மேற்கட்டியின் கீழேதங்கும் கோயிலாக அமைத்ததனால் திருப்பணி என்றார். அக்கமலவதி -அகரம், முன்பாட்டிற்கூறிய அந்த என்று முன்னறிசுட்டு. அணிமகவு - அணி - சிவனுக்குக் கோயில் அமைக்கும்; அழகிய என்றலுமாம். வயிற்றில் - வந்து - அடைய - கருப்பத்துள் வந்து புக; “பனியிலோர் பாதிசிறுதுளி மாது பண்டியில் வந்து புகுந்துÓ (உடற்கூற்று வண்ணம்); “விழுங்கரு விற்றான்Ó (போதம்); “ஆவி வைத்தார்Ó (தேவா). மாதேவியார் தமக்கு - என்பதும் பாடம். |
|
|